ஓட்டு சாவடிகளுக்கு இனி புது நெம்பர்
தமிழகத்தில் 75035 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது . கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 68467 ஓட்டு சாவடிகள் இருந்தது . தற்போது கூடுதலாக 6646 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
கடந்த தேர்தலுக்கும் தற்போது நடக்க தேர்தலுக்கும்
ஓட்டு சாவடி அமைவிடம் மற்றும் ஓட்டு சாவடி வரிசை எண் மற்றும் பாகம் எண் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது.
சட்டமன்ற தொகுதி வாரியாக புதிய ஓட்டு சாவடி வரிசை எண் மற்றும் பாகம் எண் தயாரிக்கும் பணி நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் புதிய ஓட்டு சாவடிகள் எண்ணிக்கைக்கு ஏற்ற வரிசை எண்கள் மாற்றம் செய்யப்படும்.
கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு சாவடி வரிசை எண்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது.
புதிதாக ஓட்டுச் சாவடிகள் மேப்பிங் செய்யப்பட்டு புதிய ஓட்டு சாவடி வரிசை எண் அமைக்கப்படும். அதற்கு இதுவரை பயன்பாட்டில் இல்லாத வரிசை எண் வழங்கப்படும். அந்த வரிசை எண் படியே ஓட்டு சாவடி மிஷின்களும் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில்
கடந்த தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஓட்டு சாவடிகளில் எழுதப்பட்ட
வரிசை எண்கள் விரைவில் அழிக்கப்படும்.
தேர்தல் கமிஷன் உத்தரவு பெற்று புதிய வரிசை எண் எழுதப்படும். இதற்கான பணிகள் விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது .
