கோவை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே இட ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது.

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற , தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வரும் அதிமுக பிரமுகர்களை களம் இருக்க தலைமை முடிவு செய்துள்ளது.

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பலர் சீட் விண்ணப்பம் வழங்கியிருந்தனர்.
இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ தேர்வு பெற்றுள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கொங்கு மண்டல தளபதி எஸ் பி வேலுமணி நம்பிக்கைக்கு உரியவரான சந்திரசேகர்
வேட்பாளராக தொகுதியில் களம் காண உள்ளார்.

வடவள்ளி சந்திரசேகர் மருதமலை, வடவள்ளி, பொம்மனம்பாளையம், முல்லை நகர் , சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் வீடு தேடி சென்று உதவி செய்து வருபவர். மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள், ஆதரவற்றவர்கள் , பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவில்லாத முதியவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

முப்பெரும் தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு முன்னிட்டு இவர் 300 கிரிக்கெட் அணிகளுக்கு 300 ‘கிட் பேக்’ வாங்கி கொடுத்துள்ளார். பொதுமக்கள் எளிதில் அணுகும் எளிமையானவராகவும் கேட்ட நேரத்தில் உதவிகளை வாரி வழங்கும் இளகிய மனம் படைத்தவராகவும் இருப்பதால் மக்கள் வடவள்ளி சந்திரசேகர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலம் அரசியல் பணிகளில் இவர் தீவிரமாக இருந்தும் தேர்தலில் இவர் போட்டியிட்டதில்லை. முதல்முறையாக தனது சொந்த தொகுதியில் மக்கள் ஆதரவுடன் போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பலமுனை போட்டி இருந்தபோதிலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கட்சி பாகுபாடு இன்றி பணிகள் செய்வதால் இன்ஜினியர் சந்திரசேகருக்கான ஆதரவு அமோகமாக அதிகரித்துள்ளது.

வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி, மருதமலை, பொம்மனாம்பாளையம் , கல்வீரம் பாளையம், சீரநாயக்கன்பாளையம், முல்லை நகர், நவாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வடவள்ளி சந்திரசேகருக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் மூத்தோர் ஆதரவு முன்பை விட அதிகரித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் பலத்துடன் இன்ஜினியர் சந்திரசேகர் இமாலய வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *