கோவை மாவட்டத்தில் 15,223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு…!
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள், சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள், கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள், தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள், பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 6 வேட்பாளர்கள் என 183 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாக இருக்கிறார்கள்.
16 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் 2 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்) தேவை. இதன்படி பார்த்தால் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதி என ஐந்து தொகுதிகளில் இரண்டு ஒட்டு பதிவு மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 864 ஓட்டு பதிவு மெசின்கள், 432 கன்ட்ரோல் யூனிட் 468 சின்னம் காட்டும் மெசின் என 1332 மெசின்கள் பயன்படுத்தப்படும்.
சூலூரில் 462 ஓட்டு பதிவு மெசின்கள், 462 கன்ட்ரோல் யூனிட், 500 சின்னம் காட்டு மெசின் என 1424 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. கவுண்டம்பாளையத்தில் 656 ஒட்டு பதிவு மெசின்கள், 656 கன்ட்ரோல் யூனிட், 711 சின்னம் காட்டு மெசின்கள் என 2023 மெசின்களும், கோவை வடக்கில் 812 ஓட்டு பதிவு மெசின்கள், 406 கன்ட்ரோல் யூனிட், 440 சின்னம் காட்டும் கருவி என 1252 மெசின்களும் பயன்படுத்தப்படும்.
தொண்டாமுத்தூரில் 890 ஓட்டு பதிவு மெசின்களும், 445 கன்ட்ரோல் யூனிட்களும், 482 சின்னம் காட்டும் மெசின்களும், மொத்தமாக 1372 மெசின்களும் பயன்படுத்தப்படவுள்ளது.
கோவை தெற்கில் 678 ஓட்டு பதிவு மெசின்களும், 339 கன்ட்ரோல் யூனிட், 367 சின்னம் காட்டும் கருவி என 1045 மெசின்களும், சிங்காநல்லூரில் 858 ஓட்டு மெசின்களும், 429 கன்ட்ரோல் யூனிட், 465 சின்னம் காட்டும் கருவி என 1323 மெசின்களும் பயன்படுத்தப்படும்.
கிணத்துக்கடவில் 452 ஓட்டு மெசின்கள், 452 கன்ட்ரோல் யூனிட், 490 சின்னம் காட்டும் கருவிகள் என 1394 மெசின்களும், பொள்ளாச்சியில் 337 ஓட்டு மெசின்கள், 337 கன்ட்ரோல் யூனிட், 365 சின்னம் காட்டும் கருவி என 1039 மெசின்களும், வால்பாறை தொகுதியில் 314 ஓட்டு மெசின்களும், 314 கன்ட்ரோல் யூனிட் 340 சின்னம் காட்டும் கருவி என 968 மெசின்களும் பயன்படுத்தப்படும்.
மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 6323 ஓட்டு பதிவு மெசின்கள், 4272 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4628 சின்னம் காட்டும் மெசின்கள் என 15,223 மெசின்கள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
