கோவை மாவட்டத்தில் வரும் ஆகஸ்டில்மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி …
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் மத்திய அரசு, மாநில அரசின் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பங்கேற்றனர். எப்படி கணக்கெடுப்பு நடத்துவது, என்ன கேள்விகள் கேட்பது என இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை வரும் 2027ம் ஆண்டில் தான் நடத்த போகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் முதல் கட்டமாக வீட்டு கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். இதுவும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்னோட்ட பணி தான் என தெரிவிக்கப்பட்டது. இதில் கணக்கெடுப்பாளர்களுக்கு டேட்டா சீட் நிரப்பும் முறை குறித்து விளக்கம் தரப்பட்டது. கணக்கெடுப்பு பிரத்யேக செயலி மூலமாக நடத்தப்படும்.
பேப்பர், பேனா இன்றி இந்த கணக்கெடுப்பு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் தொகை கணக்கு வீட்டு எண், வீட்டு தரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டு சுவரின் பிரதான கட்டுமானப் பொருள், கூரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டின் பயன்பாடு, வீட்டின் நிலைமை,
குடும்ப எண், குடும்பத்தில் சாதாரணமாக வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை, குடும்பத் தலைவரின் பெயர். குடும்பத் தலைவரின் பாலினம், குடும்பத் தலைவர் அட்டவணை வகுப்பு (SC)/அட்டவணை பழங்குடி வகுப்பு (ST) / மற்ற பிரிவை சார்ந்தவரா, மக்கள் தொகைக் கணக்கு வீட்டின் உரிமை நிலை,
குடும்பத்திற்கான வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை, குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீருக்கான பிரதான ஆதாரம், குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீருக்கான பிரதான ஆதாரம்,
குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம், விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம், கழிப்பிட வசதி, கழிப்பிட வசதியின் வகை, கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு, குளிக்கும் வசதி, சமையலறை வசதி மற்றும் LPG/PNG இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்,
வானொலி டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி, இணையதள வசதி, மடிக்கணினி, கணினி, தொலைபேசி, கைபேசி, ஸ்மார்ட்போன், மிதிவண்டி ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் மொபெட், கார், ஜீப், வேன், குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம் என 32 கேள்விகள் கேட்கப்படும்.
இதில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் பெற வேண்டும். பதில் பெறாமல் தாங்களே விவரங்களை பூர்த்தி செய்ய கூடாது. விவரம் சரியா என பார்த்து வீட்டின் தலைவர் உறுதி தர வேண்டும். செல்போனில் விவரங்கள் தெரிவித்து உறுதி செய்யப்படும். எனவே கணக்கெடுப்பு பணியில் ஏமாற்ற முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
