கோவை வன அலுவலகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா…

கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த பூங்காவில் நாட்டு வகை தாவரங்களை நடவு செய்து பட்டாம் பூச்சி மற்றும் தேனீக்களை கவரும் வகையில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட வனத்துறை, கியூப் அமைப்பு, ரோட்டரி ஆகியவை இணைந்து செய்துள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்காவின் துவக்க நிகழ்வு இன்று நடந்தது.

இதில், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு பங்கேற்று நாட்டு வகை தாவரங்களை நட்டு வைத்தார்.

இது குறித்து கியூப் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது: பட்டாம்பூச்சி பூங்காக்களில் பொதுவாக வெளிநாட்டு தாவரங்கள் அதிகளவில் இருக்கும். ஆனால், தற்போது நாங்கள் நாட்டு வகை தாவரங்களை பயன்படுத்தி பட்டாம் பூச்சி, தேனீக்களை கவரும் வகையிலான பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மாவட்ட வனஅலுவலகத்தில் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பில் தற்போது சோதனை அடிப்படையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், 18 வகையான தாவரங்கள், 1,200 செடிகள் நடவு செய்யப்பட இருக்கிறது.தொடர்ந்து இந்த தாவரங்களில் பட்டாம்பூச்சிகளின் வருகை உள்ளிட்டவை குறித்த தரவுகள் எடுக்கப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில் மாநகரின் பல்வேறு இடங்களில் பட்டாம் பூச்சிகளின் பூங்காவை நாட்டு வகை தாவரங்களை பயன்படுத்தி ஏற்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *