மருத்துவ காப்பீட்டுக்காக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், முறையீடு நேற்று நடந்தது. இதில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும்.
அரசு ஊழியர்களின் பெற்றோர்களையும், திருமணம் ஆகாத மகன், கணவரை இழந்த மகளையும் இத்திட்டத்தில் சேர்த்திட வேண்டும்.
அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை முறையினை உத்தரவாதப்படுத்த வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அட்டையினை அனைவருக்கும் உடன் வழங்க வேண்டும். உயர் | சிகிச்சைக்கான தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். அதிகபட்ச உச்சவரம்பு இருக்க கூடாது. |வெளிநோயாளர் சிகிச்சையினையும் முழுமையாக இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அவசர நிலையில் அருகில் இருக்கின்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில் அதன் முழு தொகையினையும் வழங்க வேண்டும்.
ஆயுஷ் மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ சிகிச்ச முறைகளையும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். பயனாளிகளிடம் சிகிச்சையின்போது கூடுதல் தொகையினை வசூலிக்கும் மருத்துவமனை மற்றும் காப்பீட்டு நிறுவனம் மீது சட்டப்படியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
