கோவையில் ஆயுதங்களுடன் கொள்ளை: கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது…
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). இவர் எல் அண்ட் டி நிறுவனத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார்.
இவரது வீட்டில் இரவு நேரத்தில் 8 பேர் ஆயுதங்களுடன் புகுந்தனர். கம்பி அரிவாள் காட்டி மிரட்டி பணம் நகை கேட்டனர் ஆனால் விஷ்ணு பணம் நகையில்லை எனக் கூறிவிட்டார் கோபம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த தோசை கல் எடுத்து விஷ்ணுவின் தலையில் தாக்கினர் மேலும் அங்கிருந்து அவரது நண்பர்கள் இரண்டு பேரையும் தாக்கினார்.
அவர்கள் பயன்படுத்திய நான்கு செல்ஃபோன் ஒரு லேப்டாப் மற்றும் ரோலக்ஸ் வாட்ச் ஆகியவற்றை பறித்து அங்கிருந்து தப்பிக்கின்றனர். இது தொடர்பாக விஷ்ணு மதுக்கரை போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டது முத்துமாரி மகன் சரண் (20) சுந்தரமூர்த்தி மகன் அசோக் (21) சுந்தர் மகன் சந்தோஷ் ஸ்ரீ (19)
செந்தில்குமார் மகன் அபிஷேக் (18) கார்த்திகை சாமி மகன் அஜய் (18) சந்திரன் மகன் ஹரிஷ் (19) முருகன் மகன் கண்ணன் (20) மேகராஜ் மகன் நிதிஷ் (19)
ஆகிய எட்டு நபர்களை கைது செய்தனர். இவர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோவையில் தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளதாக தெரிகிறது.
இவர்கள் கொள்ளையடித்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். எட்டு பேரும் கோவையில் உள்ள கற்பகம் கல்லூரி ரத்தினம் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருவது தெரியவந்துள்ளது. ஜாலியாக செலவு செய்து உல்லாசமாக வாழ்க்கை நடத்த இவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது படிக்கும் மாணவர்கள் அதிரடிக் கொள்ளையில் இறங்கி இருப்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
