கலெக்டர் அலுவலக சுவர் மீது மரம் விழுந்தது
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த புங்கன் மரம் இன்று சாய்ந்து விழுந்தது.
இதில், இரு கார் சேதம் அடைந்தது. ஒரு கார் மரக்கிளைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு – அலுவலர் சலீம் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் மிஷின் ரம்பம் மூலமாக மரக்கிளைகளை அகற்றி இடிபாடுகளில் இருந்து கார்களை மீட்டனர்.
மேலும், அந்த பகுதியில் சில கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த கார்கள் கிளைகளின் லேசான கீறல்களுடன் தப்பியது. மரம் அலுவலக காம்பவுண்டுக்கு அடுத்து உள்ள தாமஸ் கிளப் ரோடு பகுதியில் இருந்தது. ரோட்டிலிருந்து அந்த மரம் சாய்ந்து கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களாக மரம் சாய்ந்து காம்பவுண்ட் சுவரை முட்டியது.
ஆனால், அப்போதும் அகற்றாமல் விட்டதால் விழுந்து விட்டது. அந்த பகுதியில் மக்கள் யாரும் சென்று வராத நிலையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
