வன பொக்கிஷங்கள் நிறைந்த காஸ் பாரஸ்ட் மியூசியம்…
கோவை வனக்கல்லூரி வளாகத்திற்குள் 120 ஆண்டு கால பெருமை மிக்க காஸ் பாரஸ்ட் மியூசியம் உள்ளது.
மத்திய வனத்துறைக்கு சொந்தமான இந்த மியூசியம் கடந்த 1906ம் ஆண்டில் எச்.காஸ் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதில் 100 ஆண்டுகளுக்கு முன் இறந்த யானை, காட்டெருமையின் எலும்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த கால ஆதிவாசிகள் பயன்படுத்திய கூராங்கல் கத்தி, மான், முயல், கேழை ஆடுகளை வேட்டையாட பயன்படுத்திய ஈட்டி, தேக்கு இழை ஆடை மண் சொப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் மைசூர் மகாராஜா உள்ளிட்டோர் வேட்டையாடிய காட்டெருமை, மான் போன்ற வன விலங்குகளின் எலும்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள், சிறியவர்கள் 40 ரூபாய், 20 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி மியூசியத்தை பார்வையிட அனுமதி தரப்பட்டுள்ளது. இங்கே பொதுமக்கள் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டை கடந்தும் இந்த மியூசியத்திற்கு விழா எடுக்க மத்திய வனத்துறையினர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
