ஆபாச ஆப்பில் பாய் பிரண்ட்டை சந்திக்க சென்ற வாலிபருக்கு விபரீதம்

கோவை அருகே பேரூர் சுண்டக்காமுத்தூர் தியாகராஜன் நகரை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஐடி பார்க்கில் சரவணபட்டியில் வேலை செய்து வருகிறார் .

இவரின் மொபைல் போனில் ஆபாச செயலி ஒன்றின் மூலமாக ஒரு வாலிபரிடம் பழகினார் . அவரை நேரில் சந்திக்க அவருடன் ஜாலியாக இருக்க முயற்சி செய்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் சந்திக்க வருவதாக கூறினார். ஐடி நிறுவன ஊழியர் அவரை சந்திக்க சுண்டக்காமுத்தூர் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஆப் மூலமாக பழகிய பெயர் விலாசம் தெரியாத அந்த வாலிபர் கருப்பு கலர் கார் ஒன்றில் வந்தார்.

அந்தக் காரில் மேலும் மூன்று நபர்கள் இருந்தனர். ஐ டி ஊழியரை அவர்கள் காரில் அழைத்துச் சென்றனர். சிறிது தூரம் சென்ற பிறகு பின்னால் அமர்ந்திருந்த மூன்று நபர்கள் ஐடி ஊழியரின் பின் பக்கமாக இருந்து கையைப் பிடித்து கொண்டு கையால் கன்னத்தில் அறைந்தனர்.

சிறுவாணி மெயின் ரோடு பெட்ரோல் பங்க் எதிரே மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அடையாளம் தெரியாத நான்கு பேர் சேர்ந்து தாக்கி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் இரண்டு தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை அங்கிருந்து அருகிலுள்ள ஏடிஎம்க்கு அழைத்துச் சென்று வங்கி கணக்கில் இருந்த ஐந்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டனர் .

பின்னர் அவர்கள் அங்கே விட்டு சென்றனர். இது தொடர்பாக ஐடி ஊழியர் பேரூர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த பது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேலன் குளம் முத்தாரம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் ( 27) திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து வடக்கு சிதம்பரம் நகரை சேர்ந்த சக்தி விஜய்( 25 ) தனியார் எலக்ட்ரிகல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் சொக்கநாதர் கோயில் வீதியை சேர்ந்த ராம் சுந்தர் (24 ) கூலி தொழிலாளி திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவில் வாகைகுளம் படிக்கல் வீதியை சேர்ந்த சுடலைமணி (26 ) டீக்கடை தொழிலாளி ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து பணம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கிண்டர் ஆப் மூலம் பழகி இவர்கள் மேலும் சிலரிடம் இது போல் பணம் நகை பறித்திருக்கலாம் என தெரிகிறது.

2 thoughts on “ஆபாச ஆப்பில் பாய் பிரண்ட்டை சந்திக்க சென்ற வாலிபருக்கு விபரீதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *