கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு: ஒப்பந்ததாரர்கள் புகார்…
கோவை மாநகராட்சிக்குட்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகம் (AR/VR Lab) அமைத்தல் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வரும் 19ம் கோரப்பட உள்ளது .
11 பேக்கேஜ் என பிரிக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட உள்ளது.
இதற்கான டெண்டர் ஆவணத்தில், முன் அனுபவம் மற்றும் தகுதி தொடர்பாக பல்வேறு முரண்பாடான நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நிபந்தனைகள் பொதுவாக தகுதியான மற்றும் அனுபவமுள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டியிடுவதற்கு ஏதுவாக இல்லாமல், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துடன் நேரடி தொடர்புடைய நிறுவனங்களுக்கும் சாதகமாக அமையும் வகையில் நிபந்தனைகள் இருக்கிறது.
ரூ.90 லட்சம் மதிப்பிலான பணிக்கு 40 சதவீதம் அதாவது சுமார் 36 லட்ச ரூபாய்க்கு முன் அனுபவம் இருக்க வேண்டும்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு சுமார் ரூ.10 கோடிக்கு தேவையான பணி முன் அனுபவம் கேட்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அனைத்து தகுதியான மற்றும் அனுபவமுள்ள ஒப்பந்ததாரர்களும் சம வாய்ப்புடன் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேன் பவர் டெண்டர் ,
எல்இடி, பூங்கா , போர்வெல் மற்றும் கழிவறை பராமரிப்பு டெண்டர்களிலும்
பதிவு பெற்றுள்ள ஒப்பந்ததாரர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப ரூ.2 கோடி வரை இரு உரை முறை இல்லாமல் பங்கேற்கும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
கட்டிடம், சாலை அமைக்கும் எங்களுக்கு பூங்கா மற்றும் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிக்கு தகுதி இல்லை என கூறுவது வேடிக்கையானது.
கடந்த 5 ஆண்டுகளில் பிக்சிங் டெண்டர்களில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் தவிர வேறு எவறும் டெண்டர்களில் பங்குபெற முடியாத நிலைமை இருக்கிறது.
ஒப்பந்த நிபந்தனைகளில் முன் அனுபவம் 5 ஆண்டுக்கு பதில் 10 ஆண்டுகளாக மாற்ற வேண்டும். டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்படி ரூ.2 கோடிக்கு கீழ் வரும் ஒப்பந்தங்கள் இரு உரை முறைகள் இல்லாமல் அனைவரும் பங்குபெறும் வண்ணமே தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பிற துறைகளில் ஒப்பந்தம் கோரப்படுகிறது.
ஆனால் கோவை மாநகராட்சியில் மட்டும் விதிவிலக்காக செயல்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் தங்கள் தகுதி வரம்பிற்கு ஏற்ப ஒப்பந்தம் எடுக்கும் வகையில் ஒழிவு மறைவற்ற, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஒப்பந்தங்களாக கோர வழிவகை செய்ய வேண்டும்.
