ஏர் ஹோஸ்டஸ் வேலை என சீனா போலி விசா அனுப்பி இளம் பெண்ணிடம் மோசடி…
கோவை கவுண்டம்பாளையம் செட்டியார் அம்மாள் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன் (31). இவருக்கு ஒரு செயலி மூலமாக ஒரு தகவல் வந்தது. அதில், வீட்டில் இருந்தபடியே கூகுள் ரிவ்யூ செய்வதன் மூலம் தினமும் கமிஷன் தொகை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சுதர்சன், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை தனது வங்கி கணக்குகளின் மூலம் 20 தவணைகளாக மொத்தம் 12.29 லட்ச ரூபாயை ஆன்லைன் பரிவர்த்தனையில் அனுப்பினார். ஆனால் அதன்பின் அவருக்கு முதலீட்டு தொகை வரவில்லை, கமிஷன் கொகையும் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சைபர் குற்ற பகுதி இணையத்தில் புகார் அளித்தார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கணபதி ஜெயபிரகாஷ் நகரைச் சேர்ந்த கல்தா ஊெரின் (30). இவர் ஆன்லைனில் விமான ஊழியர் (ஏர் ஹோஸ்டஸ்) வேலை தேடி வந்துள்ளார். அப்போது வெப்சைட் தகவல் பதிவு மூளமாக ஆயுஷ் சிங் என்பவர் ஏர் சர்வீஸ் பிரதிநிதி என கூறி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் ஜூம் செயலியில் ஆன்லைன் நேர்காணல் நடத்தினார். இதை தொடர்ந்து நீங்கள் விமான பணியில் ஈடுபட தகுதியான நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
வேலைக்கான பணி நியமன கடிகம் மற்றும் விசா ஒப்புதல் கடிதங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்.
கலீதா ஷெரினிடம் பல்வேறு வகையான கட்டணம் என கடந்த மார்ச் 12ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 14 தவணைகளில் 7.91 லட்ச ரூபாய் பெற்றார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. பணி நியமன கடிதம், சீனா நாட்டின் விசா விவரங்களை பார்த்த போது அது போலி என தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலீதா ஷெரின் கோவை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது.
தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்பிஐ வங்கி ஊழியர் அமரராம் (66). இவர் கடந்த ஜனவரி 27ம் தேதி பேஸ்புக் பக்கத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தின் கிடைத்த தகவல் அடிப்படையில் ஆன்லைன் தொழிலுக்காக 11 தவணைகளாக 1754 லட்ச ரூபாயை குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். பின்னர் தான் முதலீடு செய்த தொகையையும் லாபத்தையும் திரும்பப் பெற முயன்றபோது, மேலும் பணம் செலுத்துமாறு தொடர்ந்து தகவல் மட்டுமே வந்தது. ஆன்லனை பிசினஸ் என மோசடி கும்பல் டெபாசிட் பெற்று வங்கி கணக்குகளை முடக்கி ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக
அமரராம் அளித்த புகாரின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

If you are looking for a platform that actually pays out on time then this is it. Everything is transparent and fair. Big wins at br333win!