சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டிலிருந்து உச்சத்தை எட்டவில்லை.

இந்த தென்மேற்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்த அளவே இருக்கிறது. 50 அடி கொண்ட அணையில் தற்போது 26.70 அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. இதனால் முழு அளவில் குடிநீர் எடுத்து விநியோகிக்க முடியாத நிலை உள்ளது. அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும்.

ஆனால் குறைந்த அளவு குடிநீர் மட்டுமே இருப்பதால் தினமும் 5.7 கோடி லிட்டர் அளவுக்கு மட்டுமே குடிநீர் தரப்படுகிறது. வரும் நாட்களில் கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் உச்சத்தை எட்டினால் மட்டுமே அதிக அளவு குடிநீர் பெற முடியும். கடந்த 10 ஆண்டுகளில் தற்போது தான் அணையின் நீர்மட்டம் மிக குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் குடி நீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தவிப்படைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் முழு அளவில் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. 22 வழியோர கிராமங்களுக்கும் போதுமான அளவு குடிநீர் வழங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக 40 முதல் 60 சதவீதம் அளவிற்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் சிறுவாணி குடிநீரை விரும்புகிறார்கள். ஆனால் மழை குறைவு காரணமாக இந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில்ண நேற்று 1 மி.மீ மழை மட்டுமே பெய்தது. மழைக்கான வாய்ப்பு குறைந்து வருவதால் நீர் மட்டம் உயர்வது அரிதாகி விட்டது.

One thought on “சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *