கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை காலம் நீட்டிப்பு…

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு கடந்த மே 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது, மேலும், முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது.

தற்போது, வரை இளநிலை படிப்புகளில் 73.37 சதவீதம் மற்றும் முதுநிலையில் 47.25 சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இந்நிலையில், அரசு கல்லூரிகளில் இளநிலையில் 31,678 பேரும், முதுநிலையில் 12,759 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பும் வகையில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை படிப்பில் சில துறைகளில் 120-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தவிர, முதுநிலை படிப்புகளிலும் குறிப்பிட்ட இடங்கள் காலியாக இருக்கிறது.

இந்த காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரி மூலம் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *