கோவையில் கட்டட வரைவு அனுமதி தாமதம்
கோவை மாநகராட்சி பகுதிகளில் கட்டட வரைவு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு வருகிறது.ஆனால்
கடந்த இரண்டு மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட கட்டிட வரைவு அனுமதி விண்ணப்பங்கள் அனுமதி வழங்காமல் முடக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆன்லைனில் கட்டட வரைவு விண்ணப்பங்களின் நிலைமை தொடர்பாக முறையாக தெரிவதில்லை என கட்டிட வரைவாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
மாநகராட்சி அனுமதி காலதாமதம் செய்து வருவதால் சிலர் அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டி வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கட்டிட வரைவு அனுமதி முறையாக வழங்கப்படவில்லை அதுவும் சமீப காலங்களில் இந்த பிரச்னை அதிகமாகிவிட்டது. மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவினர் இதனை சரி செய்யவில்லை. கட்டிட வரைவு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள்.
சில விண்ணப்பங்கள் புரோக்கர்கள் மூலமாக பெறப்பட்டு அந்த விண்ணப்பங்களுக்கு மட்டும் ரகசியமாக அனுமதி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது கட்டிடம் கட்டுபவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் உரிய அனுமதிக்காக ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை சமர்ப்பித்து கட்டிடம் கட்ட அனுமதி கேட்டால் மாநகராட்சியினர் தாமதம் செய்து வருகிறார்கள்.
மனுவை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் தொடர்ந்து கிடப்பில் போடுவது அது தொடர்பாக எந்த பதிலும் தராமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என விண்ணப்பதாரர்கள் புலம்பி வருகிறார்கள்.
சிலர் உரிய அனுமதி பெறாமல் கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் எந்த ஆய்வு செய்யவில்லை. மாநகராட்சியினர் கட்டட வரைவு அனுமதி விவகாரத்தில் தாமதம் செய்து பொதுமக்களை வெறுத்து போக வைக்கும் வகையில் செயல்படுகிறது.
சென்னையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக உயர் அதிகாரிகள் குழுவினர் கோவை மாநகராட்சி வந்து கட்டட வரைவு அனுமதி விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகராட்சி அதிகாரிகள் கட்டிட வரைவு விவகாரத்தில் தனி ராஜ்யம் நடத்தி வருவதாக கட்டிட வரைவாளர்கள் புலம்பி வருகிறார்கள்.
அனுமதி தொடர்பான ஆன்லைன் திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சியில் டீவியேஷன் கட்டிடங்கள் அதிகமாக இருக்கிறது, பழைய கட்டிடங்கள், குறிப்பாக 60 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்கள் அதிகமுள்ள பகுதியாக கோவை நகரம் இருக்கிறது. 7 பிரதான ரோடுகள், மேதசிய, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட ரோடு, மாநகராட்சி ரோடு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட் வீதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கிறது.
இதில் 10 முதல் 20 சதவீத கட்டிடங்களுக்கு முறையாக கட்டட வரைவு அனுமதி கிடையாது. வரி விதிப்பும் முறையாக செய்யவில்லை. கட்டட வரைவு அனுமதி தராமல் நெருக்கடி தர வைத்து பொதுமக்களை புரோக்கர்கள் மூலமாக அணுக வைக்கும் நோக்கத்தில் மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவினர் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் 100 சதவீத டிவியேஷன் கட்டிடங்கள் மற்றும் உரிய அனுமதி பெறாத கட்டடங்கள் இடிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டாக கட்டிடங்கள் மீதான நடவடி வடிக்கை எடுக்கவில்லை. மாறாக கமிஷன் வாங்கி முரண்பாடு கட்டிடங்களை ரோட்டிற்கு இடையூறாக கட்டிட வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். கட்டிட அனுமதிக்கு நேர்மையாக முறைப்படி விண்ணப்பித்தால் அதை கிடப்பில் போடுவதால் மக்கள் தவிப்படைந்துள்ளனர்
