கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்

கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்தவர் சேஷகிரி (70), ஆடிட்டர். இவர் பெங்களூரில் உள்ள மகனை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் ஒரு மாதம் முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இவர் வீட்டிற்கு வரவில்லை.

கடந்த 4ம் தேதி இவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள், சமையலறையில் பயன்படுத்தும் 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 7 கிலோ பித்தளை பொருட்கள். திருடப்பட்டிருந்தது. மின்சார ஒயர்களை வீட்டிற்குள்ளேயே போட்டு தீ வைத்து எரித்திருந்தனர்.

இது தொடர்பாக வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் கண்காணிப்பு கேமரா ஆதாரங்களின் கோவையை சேர்ந்த வெங்கடேஷ் (45), ராஜசேகர் (37), டேவிட் லிவிங்ஸ்டன் (56), சோழமுத்தான் என்கிற விக்கி (26), சிறுத்தை மணி (27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து வெள்ளி மற்றும் பித்தளை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 12.60 லட்ச ரூபாய்,

கைதான திருடர்கள் அளித்த வாக்குமூலத்தில், “நாங்கள் இந்த வழியாக சென்ற போது தினமும் வீடு பூட்டி கிடப்பதை பார்த்தோம். இதன் பின்னர் பூட்டை உடைத்து திருடினோம். அடுத்த நாள் வந்து பார்த்த போது அப்போதும் ஆள் வரவில்லை. சரி என மறுபடியும் திருடினோம். பின்னர் வீட்டில் கிடந்த ஒயர்களை மொத்தமாக தீ வைத்து எரித்தோம்.

அதை ஸ்கிராப் எடைக்கு போட்டு பணம் வாங்கினோம். தினமும் மது குடித்து பணத்தை ஜாலியாக செலவு செய்தோம். வீட்டில் தான் யாருமில்லையே என இங்கேயே 5 நாட்கள் படுத்து தூங்கி ஓட்டல் போல் மகிழ்ச்சியாக இருந்தோம்.

எங்களை அக்கம் பக்கத்தினரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர், வேறு பொருட்கள் கிடைக்காமல் வீட்டை விட்டு சென்று விட்டோம். ஆனால் பக்கத்து வீடுகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை நாங்கள் கவனிக்கவில்லை. பல முறை நாங்கள் இங்கே வந்து சென்றது கேமராவில் பதிவாகி விட்டது. இந்த வீட்டில் 5 நாட்கள் தங்காமல் இருந்திருந்தால் தப்பி சென்றிருப்போம், ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *