கோவை மாணவி அனுஸ்ரீ இறப்பில் மர்மம்… பெற்றோர் புகார்…!
கோவையில் நர்சிங் கல்லூரி மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெற்றோர் புகார் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் அழகு பெருமாள்சாமி (50). இவர், நேற்று தனது மனைவி, உறவினர்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
எனது மகள் அனுஸ்ரீ (20) மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். கடந்த மாதம் 23ம்தேதி அதே பகுதியில் ரோட்டை கடக்கும்போது வாகனம் மோதி இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். விபத்தில் இறந்த பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து அவர்கள் எனது மகளின் செல்போனில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
எனது மகள் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. அன்றைய கால சூழலில் அப்போது எங்களால் புகார் தரமுடியவில்லை. தற்போது சந்தேகம் அதிகமானதால் புகார் தர வந்திருக்கிறோம். கடந்த பிப்ரவரி மாதம் விடுதி கேண்டீனில் கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்ட மாணவிகள் 40 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதில், 130 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இது, டிவி, சமூக ஊடகங்களில் வெளியே வந்தது. இதுதொடர்பாக எனது மகள் தகவல் தெரிவித்து, இந்த விவகாரம் வெளியே வந்ததாக புகார் சொன்னார்கள். மேலும், சீனியர் மாணவர் ஒருவர் போலியான ஐடி மூலமாக ஆபாசமான தகவல்களை மாணவி ஒருவருக்கு பகிர்ந்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க எனது மகள் உதவி இருக்கிறாள். இந்த விவரம் அறிந்த கல்லூரி துறை தலைவர், எனது மகளை மிரட்டி உள்ளார். மற்ற மாணவ-மாணவிகளையும் மிரட்டி, “நீங்கள் எப்படி இன்டர்னல் மதிப்பெண்கள் வாங்குவீர்கள், பார்க்கலாம்.” என சவால் விட்டுள்ளார்.
எனது மகள் இறப்பதற்கு அரை மணி நேரம் முன்பு, கல்லூரி கேண்டீன் உணவு தரமாக இல்லை எனவும், உணவில் புழு இருக்கிறது எனவும் போட்டோ எடுத்திருந்தார். அந்த போட்டோ விபரங்களை பதிவு செய்துள்ளார். இதை கல்லூரி நிர்வாகத்தினர் எனது மகள் இறந்த பின்னர் டெலிட் செய்துள்ளனர். இதுதொடர்பாக எனது மகள் புகார் எழுப்பிய அரை மணி நேரத்தில் அவர், இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.இது, எங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரி நிர்வாகத்தில் நடக்கும் அவலங்களை எனது மகள் வெளிக்கொண்டு வந்துள்ளதால், அவர்களால் தாங்க முடியவில்லை. இதை தொந்தரவாக நினைத்துள்ளனர். இதன் அடுத்தக்கட்டமாக, அவர் ரோட்டை கடக்கும்போது, விபத்து ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக கூறுகிறார்கள். இதில் பல்வேறு மர்மங்கள் இருக்கிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
கல்லூரி துறை தலைவர் நடவடிக்கை, சைபர் கிரைம் புகார், கேண்டீன் புகார் என அனைத்து புகார்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும். இதிலுள்ள உண்மையை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத்தான், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி இறப்பு குறித்து பெற்றோர் எழுப்பிய இந்த புகார், மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Feeling like a total VIP here. The rewards program at ph55vip777 is honestly the best in the market.
The app installation was a breeze and the login process is super fast. It makes the whole experience much more convenient on mobile. superlgloginappapk
I’ve tried a few apps lately but this one is definitely the smoothest. The interface is so clean and it’s super easy to navigate. Highly recommend 365phapp for anyone looking for a reliable platform!