வரும் 26ம் தேதி டாஸ்மாக் கடை மூடல்…!
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள்
பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல் சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் வரும் 26ம்தேதி மீலாடி நபி தினத்தை முன்னிட்டு மூட உத்தரவிடப்படுகிறது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச்சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 193/-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The mobile app is a game changer. I can play my favorite jili games while commuting without any glitches. Get the jili979app if you want convenience on the go.