யானை மிதித்து தொழிலாளி சாவு

காரமடையை அடுத்துள்ள காலனிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்(60). இவருக்கு திருமணமாகி குரும்பி(55) என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கூலி வேலை பார்த்து வருகிறார்

பழங்குடியினத்தை சேர்ந்த ராமன் நேற்று இரவு சீங்குழி பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் இரவு முழுவதும் தேடியுள்ளனர். எனினும் ராமன் கிடைக்கவில்லை.

தொடர்ந்து இன்று காலை அவரது உறவினர்கள் தமிழக கேரளா எல்லை பகுதியான கொடுங்கரை பள்ளம் அருகே இறந்த நிலையில் சடலமாக இருப்பது கண்டு பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது அவரது உடலில் காட்டு யானை தாக்கியதற்கான காயங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 thoughts on “யானை மிதித்து தொழிலாளி சாவு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *