கோவை மாநகராட்சியின் 50 கி. மீ., துர ரோடு நெடுஞ்சாலைத் துறையிடம் விரைவில் ஒப்படைப்பு…!
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் வசம் 3360 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடுகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ரோடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது.
கடந்த 3 ஆண்டில், 250 கோடி ரூபாய் செலவிட்டும் ரோடு பராமரிப்பு பணி முறையாக நடக்கவில்லை.
சுமார் 70 கி.மீ தூரத்திற்கு இன்னும் மண் பாதை இருக்கிறது. சில இடங்களில் ரோடு குறுகலாக 6 முதல் 8 அடி அகலத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சில இடங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தார் தளம் காணாமல் போய் விட்டது.
பிரதான மெயின் ரோடுகள், பஸ்ஸ்டாண்ட் மார்க்கெட் மற்றும் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் ரோடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் இருக்கிறது. இந்த ரோடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சாலை பாதுகாப்பு கமிட்டி புகார் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில பகுதி ரோடுகளை மாநகராட்சி வசம் இருந்து, மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. கோவை மாநகராட்சியும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நகரின் முக்கிய பகுதியில் உள்ள மாநகராட்சி ரோடுகளை அளவீடு செய்து ஒப்படைக்கவுள்ளனர். சுமார் 50 கி.மீ தூர ரோடுகள் மாநகராட்சி வசம் இருந்து மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு செல்லவுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இந்த ரோடுகள் ஒப்படைக்கப்பட்ட பின் விரிவாக்கம் செய்யவும் சாலை சந்திப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும் மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், “மாநகராட்சி வசம் உள்ள பெரிய ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை வசம் வர இருக்கிறது. இதன்மூலமாக, மேம்பாட்டு பணியில் சிறப்பாக செய்ய நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்.
சிறிய வீதி மற்றும் சந்திப்பு பகுதி உள்ள மாநகராட்சி ரோடுகளை நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க மாட்டோம். மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ரோடுகள் வந்தால் எண்களின் தர அளவிற்கு ஏற்ப மேம்பாட்டு பணிகள் செய்ய முடியும்” என்றனர்.

The login process is seamless and the bonuses are actually worth it. I’m really enjoying my time on pin777loginregister so far.