கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் 2.18 விரல் ரேகை பதிவு இல்லை…
கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் விரல் ரேகை பதிவுசெய்யாமல் 2.18 லட்சம் பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவுசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணியில், அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 96 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 7,033. முன்னுரிமை கார்டுகள் 49.324 மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் 3.41.425 என மொத்தம் 3,97,182 ரேஷன் கார்டுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் பயோ மெட்ரிக் (விரல் கைரேகை) அல்லது கண் கருவிழி பதிவு செய்யாமல் நிலுவையில் இருந்தது.
இதில் கடந்த 2 மாதமாக ரேஷன் கடை வாரியாக ஆய்வு நடத்தப்பட்டது. பயனாளிகள் தங்கள் விரல் ரேகை பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட அளவில் 2,18,520 பேர் விரல் ரேகை பதிவுசெய்யவில்லை. சிலருக்கு விரல் ரேகை தேய்ந்து மறைந்து போனதால் பதிவாகாமல் இருப்பதாக தெரியவந்தது. சிலர், ஊரில் இல்லாமல் வெளியூரில் வசிப்பதாக கூறப்படுகிறது. அதிக நபர்கள் பயோ மெட்ரிக் பதிவுசெய்யாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன நபர்களை, ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்யாமல் விட்டு விட்டதாக தெரிகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்யவேண்டும். ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு பொருட்கள் ஒதுக்கீடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விரல் ரேகை பதிவு அல்லது கண் கருவிழி பதிவுகளை கட்டாயம் செய்ய வேண்டும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி ஸ்ரீராம் கூறினர்.

I’ve tried a few platforms recently but this one really stands out for its smooth interface. Definitely my new favorite spot to hang out and play. Check out vn1888vcom
Finally found a site that doesn’t lag during big wins. The interface is super clean and easy to navigate. I highly recommend phtaya09 to everyone.