போலீஸ் மாஸ் ரீல்ஸ்

கோவை மாநகரில் பள்ளி, கல்லூரிகள் அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் அடிப்படையில் 8,279 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றை அப்படியே வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த காட்சிகளை ‘ரீல்ஸ்’ எடுத்து அந்த வீடியோவை மாநகர காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை மண்ணில் புதைக்கக் கூடாது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்யும்போது அதனை எரித்து அழிக்கும் வழக்கம் உள்ள நிலையில், மண்வளத்தை பாழாக்கும் வகையில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை மண்ணில் எப்படி புதைக்கலாம்? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழக அமைச்சரவையில் உள்ள பல்வேறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் மாநகர போலீசாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என்று சூழலில் ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *