கோவை குளக்கரையில் நாற்றம்: வாக்கிங் செல்வோருக்கு குமட்டல்
கோவை குறிச்சி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ண குளம் போன்றவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்டது.
உக்கடம் வாலாங்குளத்தில் அதிக அளவு ஆகாயத்தாமரை நிரம்பி இருந்தது. இதனால், துர்நாற்றம் அதிகமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் குளத்தில் இருந்த ஆகாய தாமரைகளை கடந்த மாதம் ஜேசிபி மூலம் அகற்றினார். பெரியகுளத்திலும் ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டது. குறிச்சி குளத்தில் நீர் குறைந்து, வறண்டு போகும் நிலையில் இருக்கிறது.
சாக்கடை கழிவு நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றப்படவில்லை. முத்தண்ணன் குளத்தில் கணிசமான அளவு ஆகாய தாமரை படர்ந்துள்ளது. இந்த குளங்களில் துர்நாற்றம் அதிகமாகி விட்டது.
வழக்கமாக ஆகாய தாமரைகளின் நாற்றம் இல்லாமல் வேதிப்பொருட்கள் கழிவுகளால் வாந்தி, மயக்கம் தரும் வகையிலான நெடியுடன்கூடிய நாற்றம் வீசுவதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்துள்ளனர். மாலை நேரத்தில், காற்று வீசும்போது வாக்கிங் செல்வோர் நெடி தாங்க முடியாமல் மூச்சு திணறி வருகின்றனர்.
குறிப்பாக, குறிச்சி குளக்கரையில் வாக்கிங் செல்வோர் மிகுந்த நாற்றத்தினால் தவிப்படைந்துள்ளனர். உக்கடம், பெரியகுளம், வாலாங்குளத்திலும் இந்த நெடியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

Great value for money and very easy to get started even for beginners. It’s a very friendly environment. Explore phokpiso for more fun.