குட்டியுடன் உலா வந்த யானைகள், பார்த்துப் போ என அன்பாக கூறிய மக்கள்…

கோவை வாளையார் புதுப்பதி வன கிராமப் பகுதியில் நேற்று பிறந்த சில நாட்களே ஆன குட்டியானை மற்றும் சில பெண் யானைகள் உலா வந்தன

யானைகள் செட்டில்மென்ட் குடியிருப்பு மற்றும் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தன அப்போது யானைகளை பார்த்த பொதுமக்கள் பார்த்து மெல்ல போங்கடா பாதையில போங்கடா என அன்பாக கூறியுள்ளனர் . மேலும் இந்த காட்சிகளை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர் .

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது . இந்த யானைகள் குடியிருப்புகளில் இருந்து நீரோடை பகுதிக்கு சென்று அங்கே தண்ணீரில் குளித்து விளையாடிய காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த யானைகள் அடிக்கடி நீரோடை பகுதிக்கு வந்து செல்வதாக தெரிகிறது . குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வந்தாலும் பொது மக்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் இருப்பதாக தெரிகிறது. பொது மக்களும் யானைகள் பக்கத்தில் நின்று அன்பாக பாசமாக பேசுவது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

One thought on “குட்டியுடன் உலா வந்த யானைகள், பார்த்துப் போ என அன்பாக கூறிய மக்கள்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *