குறிச்சி குளத்தில் இருட்டில் மூழ்கிய வாக்கிங் ஏரியா
கோவை குறிச்சி குளத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கும் பணி நடத்தப்பட்டது.
3.5 கிலோ மீட்டர் சுற்று பரப்பளவில் குறிச்சி குளம் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.
குளத்தின் கரைகள் 4 மீட்டர் அகலத்தில் வாக்கிங் ஜாக்கிங் சைக்கிளிங் செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கரை ஓரங்களில் அடர்ந்த மலர் செடிகள் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு, பொங்கல் விழா சிறப்புகளை காட்டும் சிற்பக்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை நினைவு கூறும் வகையில் 5 மாடுபிடி வீரர்கள் காங்கேயம் காளையை மடக்க முயற்சிக்கும் வகையில் பைபர் கட்டுமானக்கில் 12 அடி உயரத்துக்கு சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தலையாட்டும் பெண் சிலை, பரதநாட்டிய சிலை, சிலம்பாட்ட வீரர்களின் சிலை போன்றவை தத்ரூபமாக 8 உயரத்தில் மக்களை கவரும் வகையில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குளக்கரை பகுதியில் மக்கள் ஒய்வு எடுக்க பூங்கா மற்றும் நீர்த்தேக்கத்தை ரசிக்க சர்வதேச விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற டென்சில் கூரை உருவாக்கப்பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் கண்டு ரசிக்கும் வகையில் காட்சி பகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த குளத்தின் மேற்கு மற்றும் தெற்கு கரையில் அமைக்கப்பட்ட சோலார் மின் விளக்குகள் எரிவதில்லை. சுமார் 2 கி.மீ தூரம் இருட்டாக காணப்படுகிறது. திருடர்கள் பயத்தில் குனியமுத்தூர் மற்றும் குறிச்சி பிரிவு வழியாக குளக்கரையில் மக்கள் வாக்கிங் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள கரையில் மட்டும் தெரு விளக்குகள் எரிவதால் மக்கள் வாக்கிங் செல்கின்றனர். குளக்கரை சோலார் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Finally found an app that doesn’t lag! The slot selection is massive and the bonuses are actually fair. It’s my go-to for some quick fun during my break. Highly recommend okplayslotapk
Honestly the best experience I’ve had recently. The layout is intuitive and the content is top notch. Keep up the great work guys! phpub7774