ஜெயிலுக்கு போனாலும் திருந்தாத குற்றவாளிகள்…
கோவை மத்திய சிறையில் 1,800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தினமும் 10 முதல் 15 குற்றவாளிகள் சிறைக்கு புதிதாக வருகிறார்கள். 5 முதல் 15 கைதிகள் ஜாமீனில் வெளியே செல்கின்றனர்.
ஆண்டுதோறும் 200 முதல் 300 பேர் சிறையில் இருந்து விடுதலையாகி செல்கிறார்கள்.
சிலர், அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் அவர்களது குடும்பத்தினரே ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிகிறது.
தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வீட்டிற்கு செல்பவர்கள் வேலைவாய்ப்பு, குடும்ப ஆதரவு இல்லாத நிலையில் மீண்டும் குற்றச்செயல்களை செய்யும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. தண்டனை முடிந்து வெளியே செல்பவர்கள் திருந்தி வாழ்பவர்களாக இருக்கவேண்டும். மீண்டும் வழக்கில் சி சிறைக்கு வரக்கூடாது என சிறை நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.
ஆனால், மனம் மாறியவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. கைதிகளை மூளைச்சலவை பெசய்து ஜாமீனில் அழைத்துச்சென்று சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதாக தெரிகிறது. சமீப காலமாக போதை பாக்கு, கஞ்சா வழக்கில் சிறை செல்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
சிறு கஞ்சா பொட்டலம் விற்றவர்கள், பண்டல் பண்டலாக மொத்த விற்பனையில் ஈடுபட்டவர்கள் போலீசில் சிக்கி, சிறைக்கு செல்கின்றனர். இவர்களில் சிலர் ஜாமீனில் சென்றபோதும், மேலும் குற்றம் செய்து சிறைக்கு வருவதாக தெரியவந்துள்ளது. மாநகர், புறநகரில் நடப்பாண்டில் 300க்கும் மேற்பட்ட கஞ்சா குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீசார் கூறுகையில், “திருட்டு, கொள்ளை, கஞ்சா விற்பனையில் உள்ள நபர்கள் பலர் திருந்துவதில்லை இவர்களை சிறையில் ஒன்றாக சேர விடுவதால் கூட்டாளிகளாக மாறுகிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் கோவையில் உள்ள குற்றவாளிகளிடம் நட்பாக பழகி, வெளியே சென்று அவர்களுக்காக சில குற்றங்களை செய்வதாக தெரிகிறது. சிறையில் நடக்கும் சதி திட்டங்களை சிறை நிர்வாகத்தினர் கண்காணிக்கவேண்டும். கைதிகளை அடிக்கடி செல்களில் மாற்றி அடைக்கவேண்டும்” என்றனர். சிறைத்துறையினர் கூறுகையில், “கோவை சிறையில் விவசாயம், பேக்கரி தொழில், தையல் கூடம், பேப்பர்
கோன் தயாரிப்பு உள்ளிட்ட தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. இதில், தகுதியுள்ள கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளித்து வருகிறோம். நன்றாக பயிற்சி பெற்றவர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது தொழில் நிறுவனங்களில் சேர்த்து வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். சிலர், சுயதொழில் முனைவோராக மாறுகிறார்கள். சிறைத்துறை பரிந்துரை மூலமாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் மீது எந்த புகாரும் வரவில்லை. சிறையில் பல ஆண்டு காலம் இருந்து, தண்டனை முடிந்து வெளியே சென்று செக்யூரிட்டி பணியில் சிறப்பாக பலர் பணியாற்றி வருகிறார்கள்” என்றனர்.

The variety of games here is insane! I hit a decent win on my first try, which is pretty rare. Big thanks to area188slot for the awesome service.
Easy access and no hassle at all. I appreciate how straightforward the site is without all the unnecessary clutter. jili988login is a winner.
The mobile experience here is just top-notch. I can place my bets on the go without any lag. If you are searching for a stable app, just go with 422betapp.
The app version is a game changer. No more refreshing pages and the connection is stable as a rock. Just download bd9a999apk and enjoy the ride.