சிறுவாணி அணி நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டிலிருந்து உச்சத்தை எட்டவில்லை.

இந்த தென்மேற்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யவில்லை. வடகிழக்கு பருவ மழை கடந்த காலங்களை போல் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இன்னும் மழை துவங்கவில்லை. அப்படியே மழை பெய்தாலும் அது மாவட்டத்தின் உள் பகுதியில் தான் பெய்யும். மலையோர பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்யாது காற்று வேறு திசையில் வீசுவதால் மழை பெய்யும் ஏரியாவில் மாற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்த அளவே இருக்கிறது.

50 அடி கொண்ட அணையில் தற்போது 30 அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. இதனால், முழு அளவில் குடிநீர் எடுத்து விநியோகிக்க முடியாத நிலை உள்ளது. அணையில் இருந்து தினமும் 10 கோடி விட்டர் குடிநீர் பெற முடியும்.

ஆனால், குறைந்த அளவு குடிநீர் மட்டுமே இருப்பதால் தினமும் 5.5 கோடி விட்டர் அளவுக்கு மட்டுமே குடிநீர் தரப்படுகிறது. வரும் நாட்களில் கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் உச்சத்தை எட்டினால் மட்டுமே அதிக அளவு குடிநீர் பெற முடியும். கடந்த 10 ஆண்டுகளில் தற்போது தான் அணையின் நீர்மட்டம் மிக குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தவிப்படைந்துள்ளனர். கோவை மாநகராட்சி பகுதிகளில் முழு அளவில் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. 22 வழியோர கிராமங்களுக்கும் போதுமான அளவு குடிநீர் வழங்கப்படவில்லை.

கடந்த சில மாதங்களாக 40 முதல் 60 சதவீதம் அளவிற்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் சிறுவாணி குடிநீரை விரும்புகிறார்கள். ஆனால் மழை குறைவு காரணமாக இந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

3 thoughts on “சிறுவாணி அணி நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *