மழைநீர் சேகரிப்பு தொட்டி எல்லாம் மாயமாச்சு…

கோவை மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது.

அரசு, தனியார் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொட்டி கட்ட வேண்டும். கல், மணல், வடிப்பான் என மூன்று நிலையில் நீர் சேகரித்து தெளிந்த நீரை தொட்டி அல்லது நிலத்தில் சேகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மழை காலங்களில் கட்டடங்களின் மொட்டை மாடியில் தேங்கும் மழை நீரை வடிகாட்டி, நிலத்தடி நீர் தொட்டியில் சேகரிக்கலாம். மழை நீரை பயனுள்ள வகையில் சேகரிக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது.

மாவட்ட அளவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. உள்ளாட்சிகளில் மழை நீர் சேகரிப்பு கொட்டி சுட்டினால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்படும், சொத்து வரி, குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவித்தது.

மழை நீர் தொட்டி கட்டமைப்பு குறித்த வரைபடமும், ஆதாரமும் கேட்கப்படுகிறது. சிலர் மழை நீர் கட்டமைப்பில் போலியான ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து அனுமதி பெற்று வருகின்றனர். கழிவு நீர் தொட்டியில் குழாய் மாட்டி போலியாக மழை நீர் கட்டமைப்பாக காட்டி கட்டட அனுமதி மற்றும் சொத்து, குடிநீர் இணைப்பு பெற்று வருகின்றனர். மாவட்ட அளவில் வறட்சி, வெயில் தாக்கத்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

குளங்கள், நீர் தேக்கங்கள் வறண்டு வரும் நிலையில் நீர் சேகரிப்பு தொட்டி திட்டம் கண் துடைப்பாக மாறி விட்டது, மாவட்ட அளவில் கடந்த 5 ஆண்டில் மேலும் சுமார் 10 லட்சம் கட்டுமானங்களில் மழை நீர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மொத்த கட்டமைப்புகளில் 100க்கு 5 வீடுகளில் கூ மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.

மழை காலங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளி யேறும் மழை நீர் சாக்கடையில் வீணாகி வருகிறது. இதை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆய்வு செய்யவும், மழை நீர் கட்டமைப்பு உருவாக்கவும் எந்த முயற்சியும் எடுக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் மாயமாகி விட்டது.

குறிப்பாக, அரசு துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருந்த மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கூட பராமரிப்பின்றி மூடப்பட்டு கிடக்கிறது. சில இடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படவில்லை. வறட்சி உச்சகட்டமாக இருப்பதால் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

போர்வெல் அமைத்திருப்பவர்கள் தங்களது வீட்டு வளாகத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தால் தான் போர்வெல் நீர் மட்டம் கணிசமாக உயரும். எனவே மழை நீர் தொட்டி கட்டுவதில் முறைகேடு செய்யக்கூடாது என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

2 thoughts on “மழைநீர் சேகரிப்பு தொட்டி எல்லாம் மாயமாச்சு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *