கோழி தீவன கம்பெனி மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது.

இதில் விண்ணப்ப மனு அளிக்க வந்த பொள்ளாச்சி திப்பம்பட்டி கொள்ளுப்பாளையம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை தூக்கி வீசி அவர்கள் அதிரடியாக கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில் “எங்கள் பகுதியில் சில ஆண்டிற்கு முன் கோழி தீவனம் தயாரிக்கும் கம்பெனி துவங்கியது. இப்போது அந்த கம்பெனி பெரிதாகி விட்டது. அங்கேயிருந்து நாற்றம், தூசி வருகிறது. வீட்டில் இருக்க முடியவில்லை. இந்த கம்பெனிக்காக எங்களுக்கு தர வேண்டிய அபகரித்து விட்டார்கள். நாங்கள் இங்கேயிருந்து விரட்டப்படும் நிலையில் இருக்கிறோம்.

நாங்கள் அதிகாரிகளிடம் புகார் சொன்ன போது யாரும் கவனிக்கவில்லை. நாங்கள் கிடைக்கிற வியாபாரம், கூலி வேலை செய்கிறோம். இந்த வேலையும் கிடைப்பதில்லை. எங்களை அலட்சியமாக நினைக்கிறார்கள்” என்றனர்.

பெண்கள் ஆதார் கார்டை தூக்கி வீசி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரேஸ்கோர்ஸ் போலீசார் பெண்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.

2 thoughts on “கோழி தீவன கம்பெனி மீது நரிக்குறவர் இன மக்கள் புகார்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *