கோவை வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு…டான்சா ஒப்படைப்பு ரத்து
கோவையில் மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.8 கி.மீ தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் துவக்கப்பட்டது.
பேஸ் 1. 2. 3 என மூன்று கட்டமாக பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்ட பணிகள் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 250 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த நிலையில் 2ம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரை பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த பேஸ் 2 பணிகள் நடத்த 368 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்படும் என திட்டம் தயாரிக்கப்பட்டகுட10 இடங்களில் பாலங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிறுபாலங்களுடன் 12.50 கி.மீ தூரத்திற்கு ரோடு போட முடிவு எடுக்கப்பட்டது.
நொய்யல் ஆறு, சித்திரை சாவடி வாய்க்கால், கணுவாய் ஓடை பாரதியார் பல்கலைகழக வளாக ஓடை என பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. மேலும் 30 கிராமங்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் இந்த பைபாஸ் ரோடு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது மாநில நெடுஞ்சாலைத்துறையின் கிட்ட பிரிவு சார்பில் பணிகள் நடத்தப்பட்டு வந்தது.
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நிர்வாக அனுமதிக்காக பேஸ் 2 பணிகள் காத்திருந்தது. விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையக பிரிவுக்கு (டான்சா) மாற்றி உத்தரவு வழங்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக டான்சா அதிகாரிகள் ஏஜன்சி அமைத்து ஆய்வு நடத்தினர்.
கோவையில் டான்சா அலுவலகம் கூ அமைக்கப்படவில்லை. இந்த பிரிவில் திட்ட பணி செய்வதால் பணிகள் வேகமாக நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் கோவையில் வேகமாக நடக்கும் பணிகளை பல்வேறு பிரிவுகளுக்கு மாற்றம் செய்வது அடிக்கடி நடக்கிறது. நடைமுறை, அனுமதி பெறுதல் என பல்வேறு தாமதம் காரணமாக திட்ட பணிகள் முடங்கி விடும் நிலைமை இருக்கிறது.
எனவே பைபாஸ் ரோடு பணிகளை வேகமாக நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் 2ம் கட்ட பணிகள் டான்சா வசம் இருந்து மீண்டும் கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.
டான்சாவிடம் ஒப்படைக்கப்பட்டால் ரோடு போட்ட பின்னர் சுங்க வரி வசூல் மையம் ஏற்படுத்தப்படும். கடந்த காலங்களில் டான்சா செய்த பணிகளில் சுங்க வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டது. கோவை வெஸ்டர்ன் பைபாஸ் ரோட்டில் சங்க வரி வசூல் மையம் அமைத்தால் வாகனங்கள் பைபாஸ் பயணத்தை கைவிட்டு பிரதான ரோடுகளை நாடும் சூழல் உருவாகும்.
எனவே பைபாஸ் ரோட்டில் சுங்க வரி வசூல் மையம் தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாகவே பணிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்விற்கு பின்னர் இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.
