கோவையில் பிஐ எஸ் தர முத்திரை இல்லாத 2 கிலோ தங்கம் பறிமுதல்…

கோவை நகரில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் (பிஐஎஸ்) டவுன்ஹால் பகுதியில் உள்ள சில தங்க நகைக்கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில் பிஐஎஸ் தர முத்திரை இல்லாத தங்க நகைகள் வைத்து விற்பனை செய்ததாக கிடைத்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. பிஐஎஸ் சட்டம் 2016 பிரிவு 28 விதிகளின் படி தர முத்திரை இன்றி விற்பனை செய்த தனித்துவ அடையா எண் இல்லாத 2.085 கிலோ கிராம் எடை கொண்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹால் மார்க் இல்லாத தங்க நகைகள் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு உள்ளது. இந்த குற்றச்செயலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை உண்டு அல்லது 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நகையை பொருத்து அபராதம் 5 மடங்கு விதிக்கப்படலாம். சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள், ஆதாரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. பிஐஎஸ் இயக்குநர் ரமேஷ் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற தங்க நகைகள் இருந்தால் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஐஎஸ் அலுவலகத்திற்கு புகார் தரலாம் என தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி நேரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெரிய நகை கடைகள் தர முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. பொதுமக்கள் தங்க நகைக்கடையின் மீதான நம்பிக்கையில் முத்திரை இல்லாத நகைகளை வாங்கும் நிலையிருப்பதாக தெரிகிறது. பொதுமக்கள் தர முத்திரை இருக்கிறதா என கவனிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

One thought on “கோவையில் பிஐ எஸ் தர முத்திரை இல்லாத 2 கிலோ தங்கம் பறிமுதல்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *