உயிருடன் இருந்தும் இறந்து விட்டதாக ஆதார் ரேஷன் கார்டில் பெயர் நீக்கியதாக புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கநாதன் (48) என்பவர் அளித்த புகார் மனுவில் எனது பெயரை எனக்கு தெரியாமல் ஆதார் கார்டில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. எனது ஆதார் எண் வைத்து பார்த்தால் அது `எரர்’ காட்டுகிறது. நான் இறந்து விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ரேஷன் கார்டில் இருந்து எனது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கேஸ் சிலிண்டர் என் பெயரில் இருந்தது.
நான் இறந்து விட்டதாக கருதி சிலிண்டர் புக்கிங் செய்ய முடியவில்லை. கடந்த 7 மாதமாக நான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை காட்ட முடியாமல் தவிக்கிறேன். இப்படி எல்லாமல் மோசடி நடக்குமா, யார் என் பெயரை நீக்கினார்கள், எப்போது நீக்கினார்கள் என தெரியவில்லை. இது குறித்து கேட்டால் சென்னை அலுவலகத்திற்கு வேண்டுகோள் வைத்து உயிருடன் இருப்பதாக ஆதாரம் பெற வேண்டும் என்கிறார்கள்.
அரசு நிர்வாகம் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி பெயரை நீக்கும் என எனக்கு தெரியவில்லை, ஆதார், ரேஷன் கார்டில் நான் உயிருடன் இருப்பதை காட்ட வேண்டும். ” என்றார்.
கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் அளித்த புகார் மனுவில், “கோவை மாவட்டத்திற்கு பிற மாவட்டங்களில் இருந்து செங்கல் லோடு வருகிறது. சிவ லாரிகளில் அதிக எடையில் செங்கல் ஏற்றி வருகிறார்கள் இதை போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓவர் லோடு வாகனங்கள் மீது அபராத நடவடிக்கை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும், “என தெரிவித்தனர்.
சிறுமுகையை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் அளித்த புகார் மனுவில், “ எனக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டிருக்கிறது ஆப்ரேஷன் செய்ய வேண்டி உள்ளது. பொது மருத்துவ காப்பீடு அட்டை எனக்கு இல்லை. இது தொடர்பாக தமிழக அரசின் முதல்வரின் பொது காப்பீடு அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் கொடுத்தேன். ஆனால் எனது பெயர் பிழை என காட்டுகிறது.
பலமுறை முயற்சி செய்தும் என்னால் மருத்துவ காப்பீடு அட்டை பெற முடியவில்லை. இதனால் என்னால் ஆபரேஷன் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. இதற்கு உதவி செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.
சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகார் மனுவில், “நஞ்சே கவுண்டன்புதூர் பகுதியில் மயானம் உள்ளது. கடந்த 200 ஆண்டாக இது மயானமாக இருக்கிறது. இங்கே எந்த அனுமதியும் இல்லாமல் குப்பைகளை குவிக்கிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானத்தை குப்பை மேடாக பயன்படுத்த கூடாது, ” என தெரிவித்தனர்.

Finally found a site that does not lag during the big wins. The interface is very user friendly and the payouts are legit. Love jili188login so much!
Best slot games I have found in a while. The graphics are crisp and the wins feel fair. Just spent my whole afternoon on phjili356 and had a blast.