படிக்காதவர்களுக்கு மனு எழுதி தர ஆள் இல்லை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் வாரந்தோறும் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது.

இதில் வயதான, எழுத படிக்க தெரியாதவர்கள் மனு எழுதி தர முடியாமல் இருக்கின்றனர். சிலர், ரோட்டோரம் உள்ள படிவம் விற்பனை செய்பவர்களிடம் மனு எழுதி வாங்கி வருகிறார்கள். இந்த விவரங்கள் அரசு அதிகாரிகளுக்கு சரியாக புரியாத நிலையிருக்கிறது. முறையான கோரிக்கையை விட்டு பல கோரிக்கைகளை குழப்பமாக எழுதி வருவதாக தெரிகிறது.

அரசு துறை அதிகாரிகள் குறிப்பாக சமூக பாதுகாப்பு துறையில் உள்ளவர்கள் மூலமாக மனு எழுத தர உதவி செய்யலாம், கடந்த சில ஆண்டுகளுக்கு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மூலமாக மனு எழுதி தர ஏற்பாடு செய்யப்பட்டது. வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை தொடர்பாக அதிக மனுக்கள் வருகிறது. இந்த துறையினரை மனு எழுதி தர பயன்படுத்தலாம்.

மாவட்ட நிர்வாகம் மனுதாரர்களுக்கு உதவி செய்ய முன் வந்தால், மக்கள் ரோட்டில் காத்திருக்கும் காலம் குறையும். மேலும் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண முடியும் என மக்கள் தெரிவித்தனர்.

One thought on “படிக்காதவர்களுக்கு மனு எழுதி தர ஆள் இல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *