நடக்க முடியாத நடை பாதைகள்
நடைபாதையை மீட்க எதிர்பார்ப்பகோவை அரசு மருத்துவமனை முன் உள்ள நடை பாதை, ஸ்டேட் பாங்க் ரோடு இரு பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.
சில இடங்களில் இந்த நடைபாதையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுக்காமல் மாநகராட்சியினர், வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் போட்டு செல்கிறார்கள். நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் ஆங்காங்கே கான்கிரீட் தடுப்பு, ஒயர், சில இடங்களில் பேரி கார்டு வைத்துள்ளனர்.
கழிவு நீரும் நடைபாதையில் பாய்வதால் மக்கள் ரோட்டில் தான் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. பல இடங்களில் நடைபாதைகளை பிளாட்பாரவாசிகள் ஆக்கிரமித்து விட்டார்கள். பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நடுரோடு வரை வந்து நிற்க வேண்டியுள்ளது. பஸ்கள் நடு ரோட்டில் நிறுத்தப்படுகிறது.
நடைபாதைகளை மீட்க மாநகராட்சி நிர்வாகம் முனனப்பு காட்ட வேண்டும். நகரில் நடைபாதை நடப்பதற்கு பயன்படுத்த முடியாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம், சாலை பாதுகாப்பு கமிட்டி, போக்குவரத்து கூட்டம் நடத்தியும் வேடிக்கை பார்ப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

The login process is super smooth and I rarely encounter any glitches. It makes the whole gaming session much more enjoyable. Highly recommend 17jililogin to everyone.