விஜய் ஆட்சியில் 15 லட்சம் கோடி கடன் உருவாகும்… மாநாட்டில் அண்ணாமலை பேச்சு…
கோவை பொள்ளாச்சியில் போதை இல்லாத தமிழகம் என்ற பெயரில் வீ தி லீடர்ஸ் மாநாடு இன்று நடைபெற்றது இதில் அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது
இந்த அமைப்பில் யாருக்கும் பொறுப்பு தலைவர் எதுவும் கிடையாது . அனைவரும் தன்னார்வலர்கள் தான்.
இந்த அமைப்பை ஆரம்பிக்கும் போதே நாம் 50 சதவீதம் தாண்டி விட்டோம் மாணவர்கள் இங்கே உறுதிமொழி எடுத்தார்கள் போதைக்கு எதிராக நாம் இறங்கி வேலை செய்ய வேண்டும் இங்கே உறுதிமொழி எடுத்த மாணவர் ஒருவரின் தந்தை இறந்துவிட்டார்.
அவர் இறந்த தகவல் அறிந்தும் அந்த மாணவர் கண்ணீருடன் உறுதிமொழி ஏற்றார். அந்த மாணவரின் தந்தைக்கும் மது பழக்கம் இருந்துள்ளது .
இந்த இயக்கத்தை ஆரம்பித்த 38வது நாளில் 19 லட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்கள்.
யாருக்குமே நாங்கள் போன் போட்டு வாங்க என அழைக்கவில்லை. சும்மா மிஸ்டு கால் விட்டு உறுப்பினர்களை சேர்க்கவில்லை. ஆறு மாதம் இப்படித்தான் இருப்போம். அடுத்தடுத்து பணிகள் செய்யப் போகிறோம் ஆறு மாதம் முக்கிய பிரச்சினைகளை மக்களை சந்தித்து தீர்க்கப் போகிறோம்
நமது இயக்கத்தில் 17 சதவீதம் பேர் மகளிர் இருக்கிறார்கள் மற்ற கட்சிகளில் 5 சதவீதம் தான் மகளிர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஜென்சி என அழைக்கப்படும் இளம் வாக்காளர்கள் 14% பேர் இருக்கிறார்கள். 26 முதல் 39 வயது வரை உள்ளவர் 40 சதவீதம் பேர் இருக்கிறார்கள் 39 சதவீதத்துக்கு உட்பட்டவர்கள் 54 சதவீதம் பேர் நமது இயக்கத்தில் இருக்கிறார்கள்.
உடனடியாக ஆட்சி மாற்றம் வேண்டும் என நாம் கேட்கவில்லை ஒரு ஆண்டு காலம் அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனைத் தவிர மற்றவர்கள் எல்லாமே அந்த கட்சியில் புதியவர்கள். அவர்கள் தட்டு தடுமாறி தான் செயல்படுவார்கள். அதனால் நாம் போதிய அவகாசம் தரவேண்டும்.
நமது இயக்கத்தில் உறுப்பினர்களை 50 லட்சம் ஆக மாற்ற வேண்டும் .
தமிழகத்தில் 5,500 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இன்னும் பள்ளி கல்வி நிறுவனங்கள் அருகே 500 மீட்டர் தூரத்திற்குள் நிறைய நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் இருக்கிறது இவற்றை அகற்ற சொல்லி நாம் கேட்டிருக்கிறோம்
கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்கிறார்கள் ஆனால் வாங்குபவர்களை யாரும் பிடிப்பதில்லை
நான் செய்வது ஆரோக்கியமான அரசியல் செய்வேன். மற்ற கட்சிகளைப் போல் நாம் செய்ய மாட்டோம் நமது இலக்கு 2031. அரசியல் அதிகாரம் பெறுவதற்காக நாம் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை நாம் இதைவிட சிறப்பாக பணி செய்வோம் என உத்தரவாதம் தருகிறோம்
நம்மை பிஜேபி பி டீம் என சொன்னார்கள்
நம் இயக்கம் ஆரம்பித்தது மற்றவர்களை திட்டுவதற்காக அல்ல
நான் பிஜேபியில் இருந்தேன். அங்கே இருந்து வரும்போது சொல்லிவிட்டு வந்தேன். பழி சொல்லிவிட்டு வரவில்லை. நான் தேசியவாதி தான். சாதி மதம் என்று அடையாளத்தை வீட்டில் சட்டை போல் கலட்டி வைத்துவிட்டு தான் வெளியே வருவேன்.
சாதி மதம் என பார்க்காமல் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்
இனாம் நிலம் கோயிலுக்கு சொந்தமானது அல்ல. இந்த நிலத்தை அங்கே பணி செய்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் இனாம் நிலத்தை அங்கே பணி செய்யும் வசித்து வருபவர்களுக்கு தருவோம் என தெரிவித்தார். நம்மிடம் சாதி மத அரசியல் கிடையாது.
இந்தியாவில் மருத்துவத்துக்காக அதிக தொகை செலவிடும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மற்றும் மாநிலங்களில் 33,000 ஆண்டுக்கு செலவிட வேண்டி இருந்தால் தமிழகத்தில் 44 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டி இருக்கிறது.
50 லட்சம் மரக்கன்று நடுவோம். இங்கே தலைவர்கள் போட்டோ கட்டவுட் எதுவும் இல்லாமல் மாநாடு நடத்தியிருக்கிறோம்
தமிழகத்தில் 10 லட்சம் கடன் இருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டி இருக்கிறது.
இதன்படி பார்த்தால் தமிழக வெற்றிக்கழக ஆட்சி முடியும் போது 5 ஆண்டுகளில் 15 லட்சம் கோடி கடன் வந்துவிடும். இந்த அரசு அறிவித்த திட்டங்களுக்காக இவ்வளவு தொகை கடன் வாங்க வேண்டி இருக்கும்
.
நமது இயக்கம் ஆட்சிக்கு வரும்போது உலக அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்படும். இந்த இயக்கம் 50 லட்சம் உறுப்பினர்களை அடையும்போது அரசியல் கட்சியாக மாற்றம் செய்யப்படும். இந்த இலக்கை அடையும் வகையில் நாம் பணி செய்ய வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்
