CM insurance: தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை பெற முடியாமல் மக்கள் தவிப்பு…

தமிழகத்தில் அரசின் பொது இலவச காப்பீடு திட்டத்தில் சர்வர் பிரச்னையால் கடந்த 4 நாட்களாக மக்கள் பயன்பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் முதல்வரின் இலவச பொது மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் கீழ் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆபரேஷன் தேவைப்படுபவர்களுக்கு பொது மருத்துவ காப்பீடு அட்டை அவசியமாக கேட்கிறார்கள்.

மாநில அளவில் பெரும்பாலான பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக இலவச பொது மருத்துவ காப்பீடு திட்டத்தின் சர்வர் பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக தெரிகிறது. சர்வர் பெயிலியர் என காட்டுவதால் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக கடந்த காலங்களில் இலவச மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்கள் கிராம நிர்வாக அலுவவர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வந்து மருத்துவ காப்பீடு அட்டை பெற காத்திருந்தனர். இவர்களுக்கு காப்பீடு திட்டத்தில் உறுப்பினராக சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் காப்பீட்டில்

சிகிச்சை பெற்றவர்கள் சர்வர் பிரச்னையை காரணம் காட்டி ஆபரேஷன் செய்ய முடியாது எனக்கூறி விட்டார்கள். சர்வர் சரியான பின்னர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற முடியும் எனக்கூறியதால் அட்டை வைத்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காப்பீடு அட்டை கேட்டு அனைத்து

மாவட்டங்களிலும் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது மருத்துவ காப்பீடு அலுவலகங்களில் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காப்பீடு அட்டைக்காக வந்த முதியோர், இன்னும் என்ன செய்ய சொல்றீங்க, உசுரோட இருக்கிறதா, சாகறதா, எப்ப தான் எங்க பிரச்னையை சரி செய்வீங்க என கேட்டு ஆதங்கத்துடன் புலம்பி சென்றனர்.

காப்பீடு திட்டத்தை ரேஷன் கார்டு சர்வருடன் ஒப்பிட்டு இணைக்க முயற்சி நடக்கிறது. இந்த திட்டம் முடிந்தால் சர்வர் நார்மல் நிலைக்கு வரும். ரேஷன் கார்டு விவரங்களுடன் ஒப்பிட சர்வர் எடுக்கப்பட்டது. அதனால் தான் இந்த பிரச்னை என காப்பீடு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *