உதவி கேட்டு குவிந்த மாற்று திறனாளிகள்

மாற்று திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாற்று திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 250க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மனு கொடுத்தனர். மூளை முடக்குவாத நோய் பாதிப்பில் இருந்தவருக்கு மொபட் வழங்கப்பட்டது. சிலர் மொபட் கேட்டும், மூன்று சக்கர வாகனம், செயற்கை அவயங்கள், முதல்வர் காப்பீடு அட்டை,

ஆதார் திருத்தம் கேட்டு மனு கொடுத்தனர். இலவச மனை பட்டா, வீடு கேட்டும் மனுக்கள் குவிந்தது. மாற்று திறனாளிகள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *