எப்எல் 2 பார் லைசன்ஸ் நிறுத்தம்….

கோவை மாவட்டத்தில் 295 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தது. இவற்றில் 71 மதுபான கடைகள் பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகே இருப்பதாக கூறி மூடப்பட்டது.

இது தவிர எப்.எல்1 மற்றும் எப்.எல் 2, ஓட்டல் லாட்ஜ் உரிமம் பெற்ற 120க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் இயங்கி வருகிறது.

மனமகிழ் மன்றம், ஓட்டல், லாட்ஜ்களில் செயல்படும் தனியார் பார்களை மாவட்ட கலால் துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் மனமகிழ் மன்றங்கள் பெயரில் எப்.எல் 2 உரிமம் பெற்ற தனியார் பார்கள் அதிகளவு துவக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு இணையாக எப்படி தனியார் பார்கள் இவ்வளவு அதிகமாக துவங்க அனுமதி வழங்கப்பட்டது.

தனியார் மயமாக்கும் வேலை ரகசியமாக நடந்ததா? என டாஸ்மாக் ஊழியர்கள் கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து எல்எல்2 பார்களுக்கான உரிமம் வழங்குவது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பார்கள் துவங்க பெறப்பட்டிருக்கிறது.

இந்த விண்ணப்பங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுவிலக்கு அலமாக்க துறை டாஸ்மாக், பார் விவகாரத்தில் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை. ரெஸ்டோ பார் திட்டம் வருமா, வராதா எனவும் உறுதி செய்யவில்லை.

எனவே, தனியார் பார் லைசென்ஸ் நிறுத்தம் செய்து அதற்கான இணைய தள சேவை போர்டல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தனியார் பார்களில் விதிமுறை மீறல் உச்சகட்டமாக இருந்தது. டாஸ்மாக் கடைகள் போல் தனியார் பார்கள் இயங்கியது. உறுப்பினர்கள் மட்டுமே மது குடிக்க அனுமதி முற்றிலும் மீறப்பட்டது. இதன் காரணமாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தனியார் பார்களுக்கு மட்டும் நல்ல பிராண்ட் சரக்குகள் சப்ளையாகிறது. டாஸ்மாக் கடைகளில் குறைந்த விலை மதுபாட்டில்கள் மட்டுமே வழங்குவதாகவும், கொள்முதலில் முறைகேடு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த முறைகேடு இருப்பதை ஒப்பு கொண்டாலும் அதை சரி செய்ய கலால், மது விலக்கு துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் தீர்வு காண்போம் என மது விலக்கு அதிகாரிகள் காலம் கடத்தி தவறுகளுக்கு துணை போவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *