கோவையில் பதுக்கிய 205 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்…
கோவை சரவணம்பட்டி 4வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். அதில், அங்கு சட்டவிரோதமாக குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு யாரும் இல்லாததால் போலீசார் வீட்டில் இருந்த 1,530 பாக்கெட்டுகள் கொண்ட 205 கிலோ குட்கா மற்றும் ரூ.79,300ஐ பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பார்த்திபன் என்பவர் அந்த வீட்டில் வசித்து வந்ததும், அவர் குறித்த மற்ற விவரங்கள் தெரியது என்றும் அக்கம் பக்கத்தினர் போலீசாரின் விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு பார்த்திபன் என்பது யார்? எங்கிருந்து குட்கா வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
