Avin app: முறைகேடு ஊழல்: ஆவின் முகவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்…

Chief reporter…கலைவாணன்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநகர் மாவட்ட தலைவர் லிங்கம் தலைமையில் ஆவின் முகவர்கள் நேற்று கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை ஆவின் பால் ஒன்றியத்தில் முகவர்கள் 700 பேர் மூலமாகவும். தயிர் 40 ஏஜென்சிகள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனுடைய வரவு செலவ சம்பந்தப்பட்ட பால் விற்பனை ஆர்டர்,பால்விற்பனை கமிஷன் தொகை மேலும் ஆவின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆன்லைன் செயலி மூலம் கன்ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

|இது அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக பால் விற்பனை ஆர்டரில் குழப்பம் இருக்கிறது.பால் ஆர்டர் ஆன்லைன் செயலியில் சரியாக பதிவாகாமல் மறுநாள் பால் வினியோகத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள் காணப்படுகிறது.மேலும் பால் விற்பனை கமிஷன் தொகை சில மாதங்களாக பல முகவர்களுக்கு கிடைக்காமல் இருக்கிறது. எங்கள் பணத்தை இரண்டு சதவீத பிடித்து வைத்துள்ளனர். மேலும் பால் அட்டைதாரர் பால் வினியோகம் செய்யமுடியாமல் செயலினால் குழப்பம் அடைந்துள்ளனர். ஆவின் நிர்வாகத்தில் சர்வர் பிரச்னை, மேலும் தயிர் மொத்த விற்பனையாளர்கள் 40 பேர் உள்ள நிலையில் ஆவின் நிர்வாகத்தின் கேட்பாஸ் மூலமாக ஒப்பந்த வண்டி மூலம் அவர்களுக்கு தயிர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தனிநபர் ஒருவர் அவர்களை நிர்பந்தப்படுத்தி தன்னிடம் தான் தயிர் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆவின் நிர்வாகம் துணை போகிறது.

ஆவின் முகவர் சங்கம் ஆவின் நிர்வாகத்திற்கு துணையாக முகவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. எந்த தகவலும் தெரிவிக்காமல் மாவட்ட பொது மேலாளர் சங்க லெட்டர் பேடில் கையெழுத்து வாங்கி முகவர்களை ஏமாற்றுகிறார். புதிய செயலியை பற்றி தெரிந்த அலுவலர்கள் இடம் மாற்றப்பட்டனர். கோவை மாவட்டத்தில் ஆவினுக்கு மேலாளர் பணியிடம் இன்சார்ஜ் ஆக இருக்கிறது. 15 ஆண்டுகளாக இங்கே ஏகப்பட்ட பிரச்னைகள், நிர்வாக குளறுபடி ஊழல் நடக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *