பைக் டாக்ஸி தடுக்கணும்… கால் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்…

கோவையில் கால் டாக்சி டிரைவர்கள் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

இதுகுறித்து டிரைவர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில்,“கோவையில் பைக் டாக்சி மற்றும் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் அதிகமாகி விட்டனர். இதனால், எங்களை போன்ற கால் டாக்சி டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு கலெக்டரிடம் மனு அளித்தோம்.

இதையடுத்து இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவினர் |பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், தற்போது கடந்த ஆண்டை விட, அதிகளவு சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அரசிற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. உரிய அனுமதி இன்றி, வணிக பயன்பாட்டிற்கான விதிமுறைகளை மீறி இயக்கப்படும் இதுபோன்ற வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும், மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி சொந்த வாகனங்கள் மற்றும் பைக் டாக்சியில் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *