கோவை ரேஷன் கடையில் தரமற்ற பற்றாக்குறை வெங்காயம் விற்பனையா..!?

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11.60 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது.

வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், சலுகை விலையில் வழங்கும் நோக்கத்தில் நாசிக் நகரில் இருந்து லாரிகளில் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்து வழங்கும் பணியை கூட்டுறவு துறையினர் மேற்கொண்டனர். கோவையில் முதற்கட்டமாக 650 ரேஷன் கடைகளுக்கு இன்று பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.

பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை 2 செய்யப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடைகளில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.75 வரை விற்பனையானது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்ததது.

இதன்படி ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடைக்கு வந்த பெரிய வெங்காயம் சின்னதாக காணப்பட்டது. சில வெங்காயம் கெட்டு அழுகி போய் கிடந்தது. ஆனால் கடைகளில் மொத்தமாக ரோட்டு கடைகள் போல் அளந்து தருவதால் மக்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர் வெளி சந்தையை விட ஏறக்குறைய பாதி விலை என கெட்டு போன மூன்றாம் – தரமான வெங்காயத்தை தருகிறார்கள்.

வெளி சந்தையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த வேண்டும். வெங்காயம் பதுக்கலை தடுக்க வேண்டும். இதை விட்டு ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இல்லை. ரேஷன் கடையில் ஆயிரம் முதல் 1200 கார்டுகள் இருக்கிறது. இருக்கிறது. கோவை மாவட்டத்திற்கு 85 டன் வெங்காயம் வந்துள்ளது.

ஒரு கடைக்கு 100 முதல் 150 கிலோ தான் வெங்காயம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பேருக்கு கிடைக்கும். நாங்களும் வெங்காயம் விற்பனை செய்தோம் என கணக்கு காட்டுவது சரியல்ல என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *