drone survey: கோவையில் ஆழமான, அபாய கல் குவாரிகள் விரைவில் மூடல்…

கோவை மாவட்டத்தில் அதிக ஆழம், அபாயமான கல் குவாரிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 151 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரிய பசுமை வரி செலுத்தப்பட்டதா என கண்டறிந்து அதனை பெற வேண்டும். முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள்…

Read More

Kovai monsoon: தென் பருவ மழை பாதிப்பு தடுக்க ஆலோசனை…

meeting துவங்கும் முன் அதிகாரிகள் போன் chatting… கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் பழனிகுமார், ஆர்டீஓ மாருதிபிரியா, வினோத்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே…

Read More

கோவையில் பாலியல் கொலையாளி கார்த்திக்கிடம் விரைவில் கஸ்டடி விசாரணை

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைப்புச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய…

Read More

கள்ளகாதல் விவகாரத்தால் கோவையில் டிரைவர் குத்தி கொலையா போலீசார் விசாரணை…!

கோவை ஆர் எஸ் புரம் அருகே உள்ள பட்டுநூல் கார சந்து பகுதியை சேர்ந்தவர் பஷீர் . இவர் மகன் அபுதாகிர் பாஷா (27). இவர் ஆக்டிங் டிரைவராக பணி செய்து வந்தார். தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் நடத்தி வந்ததார். கடந்த 29ம் தேதி அபுதாகிர் பாஷா தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் இரவு 8 மணியளவில் அவர் தனது வீட்டின் அருகிலேயே நின்று கொண்டிருந்ததை அவருடைய தாய் பாத்திமா…

Read More

கஞ்சா, மெத்தபெட்டமைன் இருக்குதா… கோவை பஸ் ஸ்டாண்டில் மாஸ் செக்கிங்… !

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சிந்தடிக் டிரக் என அழைக்கப்படும் போதைப் பொருட்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று அதிகாலை கோவை மாநகர போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் நகரின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் கண்டறிய சோதனை நடத்தினர். குறிப்பாக காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், விரைவு பஸ் ,ஸ்டாண்ட் டவுன் பஸ் ஸ்டாண்ட் போன்றவற்றில் போலீசார் பயணிகள் உடைமைகள் மற்றும் பார்சல் பிரிவுகளில் வைக்கப்பட்டிருந்த பார்சல் மூட்டைகள், பெட்டிகள்,…

Read More

கஞ்சா விற்பனை சீக்கிரம் தடுக்கணும்… மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் உத்தரவு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு, கலால் துறை பணிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாவட்ட கலால் துறை துணை கமிஷனர் முருகேசன், மாவட்ட எஸ்பி பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ், “மதுபானங்கள், போதை பொருட்கள் பயன்பாடு தொடர்பாக விசாரித்தார். அப்போது அவர் மாவட்டத்தில் போதை…

Read More

கோயிலுக்கு போற வழிய அடைச்சுட்டாங்க… கோவை கலெக்டரிடம் இந்து முன்னணி புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட தலைவர் தசரதன், செய்தி மெதாடர்பாளர் தனபால் உள்ளிட்டோர் நேற்று அளித்த புகார் மனுவில், “கோவை மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் வயல் பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விவசாய நிலத்திற்கு அருகிலும் நீர் ஓடையை மறைத்து சட்டவிரோதமாக கல்லறை அமைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த காலங்களில் மூன்று இடங்களில்…

Read More

கோவை கலெக்டர் ஆபீஸில் பல தடவ மனு கொடுத்தாச்சு… உதவ மாட்டேங்கிறாங்க

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலெக்டர் பவன் குமார், வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அன்னூர் கோவிந்த நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கீதா (30) தனது குழந்தைகளுடன் வந்து புகார் மனு அளித்தார். அப்போது அவர் தனது கணவர் 4 ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இலவச மனை பட்டா கேட்டு 5…

Read More

Farmers issue: அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்யுங்க…! கோவையில் விவசாயிகள் போராட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வேலு மந்திராச்சலம், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் கூறியதாவது: மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள தேசிய புள்ளிவிவரத்தின் படி தமிழ்நாட்டில் உள்ள விவசாய குடும்பங்களின் மாதாந்திர வருமானம் சராசரி 11.924 ரூபாய், ஆனால் தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சராசரியாக 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட…

Read More

Coimbatore incident: நாய்க்கு பயந்து ஓடியவர் சாவு…

கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரண்டு நாட்கள் நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து இன்று காலை நீதிமன்ற வளாகத்தை திறப்பதற்காக ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் உள்புறமாக சுமார் 30 வயது வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் தரையில் கிடப்பதைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அந்த வாலிபரின் உடலை பரிசோதித்துப் பார்த்தபோது,…

Read More