கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் 2 பேருக்கு குண்டாஸ்…!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கார்த்திக் ( 33 ) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் மீது சிறார் பாலியல் பலாத்கார (போக்சோ) சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்து குளக்கரையில் சடலத்தை போட்டு சென்றதாக தெரியவந்தது . கோவை மட்டுமின்றி மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கார்த்திக் கைது…

Read More

கோவை கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாக விழா…

கோவை கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாகத் திருவிழா பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது . சோழமண்டல அரசனாகிய கரிகால சோழ மன்னரால் கோவை கோட்டைமேட்டில் இந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் கருட உற்சவர் தினமான வைகாசி விசாக நட்சத்திர தினத்தன்று இந்த கோயிலில் திருத்தேர் உற்சவம் நடத்தும்படி கரிகால சோழன் உத்தரவிட்டு அந்த நடைமுறைப்படி தொன்று தொட்டு இந்த உற்சவம் ஆனது நடக்கிறது. கடந்த 23ம் தேதி வாஸ்து சாந்தியுடன்…

Read More

கோவை மாவட்டத்தில் வரும் ஆகஸ்டில்மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி …

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய அரசு, மாநில அரசின் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பங்கேற்றனர். எப்படி கணக்கெடுப்பு நடத்துவது, என்ன கேள்விகள் கேட்பது என இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை வரும் 2027ம் ஆண்டில் தான் நடத்த போகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் முதல் கட்டமாக வீட்டு கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்….

Read More

கோவை மாவட்டத்தில் மின்சார ரீடிங் எடுக்க ஆள் பற்றாக்குறை…

கோவை மாவட்டத்தில் மின் வாரியத்தில் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர், உதவியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் 60 சதவீதம் காலியாக இருப்பதாக தெரிகிறது. காலியிடம் பூர்த்தி செய்ய மின்வாரிய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் காலி பணியிடம் நிரப்பவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கோவை சரகத்தில் சுமார் 6 ஆயிரம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மின் வாரியத்தில் அவுட் சோர்ஸ் மூலமாக கூட காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் மின் வாரிய பணிகளில் விதிமுறை…

Read More

கோவை மாநகராட்சி பள்ளிகளில் அட்மிஷன் மறுப்பதாக புகார்…

கோவை மாநகராட்சியில் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கடந்த ஆண்டு விட நடப்பு கல்வியாண்டில் கூடுதல் மாணவ மாணவிகளை சேர்க்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு வழங்கியது. ஆனால் சில பள்ளி நிர்வாகங்கள் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்துவதில்லை. மாறாக மாணவர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீவிரம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஒப்பணக்கார வீதியில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2000 மாணவிகள் கல்வி கற்று வந்தனர். இந்த பள்ளியில் கடந்த…

Read More

கோவை சத்தி ரோடு NHAI வசம் விரைவில் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் சத்தி மெயின் ரோடு இருக்கிறது. இதில் புளியம்பட்டி முதல் பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி கற்பகம் கல்லூரி வரை உள்ள என்.எச் 948 என்ற ரோட்டில் 53 கி.மீ. தொலைவில் உள்ள பிரதான பாதை தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது சத்தி மெயின் ரோட்டில் 40 கோடி ரூபாய் செலவில் கணபதி டெக்ஸ்டூல் பாலம் முதல் சரவணம்பட்டி வரை 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க…

Read More

போலீஸ் விசாரணை எப்படி இருக்கு… கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள், சட்ட விரோத செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. மக்கள் போலீஸ் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்து கலெக்டரிடம் அதிரடியாக புகார் கூறி வருகிறார்கள். குறிப்பாக இட பிரச்னையில் போலீசார் அத்துமீறி செயல்படுகிறார்கள். சிவில் விவகாரத்தில் தலையிட கூடாது என உத்தரவு இருந்தாலும் அதை சட்டம் ஒழுங்கு பிரச்னை, தகராறு, மோதல் விவகாரம் என மாற்றி விசாரிக்க அழைத்து போலீசார் அத்து மீறி வருவதாக தெரிகிறது. மேலும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால்…

Read More

கோவை குளங்கள் குத்தகையில் அபகரிப்பு…

கோவை மாவட்டத்தில் 32 குளங்கள், 20 தடுப்பணை இருந்தது. இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த அம்மன் குளம், மண்ணரை குளம் உட்பட 4 குளங்கள் பயன்பாடின்றி அழிந்து போனது சில குளங்களின் நீர் தேக்க பரப்பு குறைந்து வருகிறது. 38 ஏக்கர் பரப்பிலான அம்மன் குளம் பொதுப்பணித்துறை வசம் இருந்து குடிசை வாரியத்தின் வசம் ஒப்படைக்கபட்டு, அங்கே 2,350 வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர் தேக்க குளம் என்ற அடையாளத்தை அம்மன் குளம் இழந்து…

Read More

தமிழகத்தில் இலவச பஸ் பயணம் அறிவிப்பு வருமா… அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…

கோவையில் தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவாக சிகிச்சை பெற்று வந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஆண்டுக்கு இரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். எனக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் சரியாக இருக்கிறது. தவெக அமைச்சர்கள் எல்லாம் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற தகவல் உள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன என…

Read More

கோவையில் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய காதலன் கைது…

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணிற்கும் சென்னையை சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் (26) என்ற இளைஞருடன் காதல் இருந்தது. கார்த்திக் மீது மாநில அளவில் காவல் நிலையங்களில் 31 குற்ற வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தெரிகிறது. காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இந்த நிலையில் இளம்பெண் கார்த்திக் உடன் பேச மறுத்துவிட்டார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர் மூன்று பேருடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு‌…

Read More