மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பணி வரும் 17ம் தேதி துவக்கம்

கணக்கெடுப்பு தொடர்பாக கலெக்டர் பவன் குமார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் 1ம் தேதி துவக்கப்படும்.

இதற்கு முன்னோட்டமாக வரும் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு பணி என்பது பொதுமக்கள் தங்கள் செல்போனில் https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் தங்களை பற்றி சுய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். மாநிலம் என்ற பகுதியில் தமிழ்நாடு என தேர்வு செய்து கேப்ட்சா குறியீடு வழங்கவும்.

செல்போனிற்கு ஒடிபி வரும். இதில் 33 கேள்விகள் கேட்கப்படும். கட்டடம் வீட்டு விவரம் தொடர்பாக 7 கேள்விகள், குடும்ப விவரங்கள் தொடர்பாக | 8 முதல் 24 கேள்விகள், குடும்ப சொத்து மற்றும் டிஜிட்டல் வசதி தொடர்பாக 25 முதல் 31 கேள்விகள், உணவு தொடர்பு தொடர்பாக 2 கேள்விகள் என 33 கேள்விகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு 15 முதல் 20 |நிமிடங்கள் தேவைப்படும்.

வீட்டு எண், வீட்டு தரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டு சுவரின் பிரதான கட்டுமானப் பொருள், கூரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டின் பயன்பாடு, வீட்டின் நிலைமை, குடும்ப எண், குடும்பத்தில் சாதாரணமாக வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை, குடும்பத் தலைவரின் பெயர். குடும்பத் தலைவரின் பாலினம், குடும்பத் தலைவர் அட்டவணை வகுப்பு (SC)/அட்டவணை பழங்குடி வகுப்பு (ST) / மற்ற பிரிவை சார்ந்தவரா,

மக்கள் தொகைக் கணக்கு வீட்டின் உரிமை நிலை, குடும்பத்திற்கான வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை, குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீருக்கான பிரதான ஆதாரம், குடும்பத்தில் உள்ள திருமணமான |தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீருக்கான பிரதான ஆதாரம், குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்,

விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம், கழிப்பிட வசதி, கழிப்பிட வசதியின் வகை, கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு, குளிக்கும் வசதி, சமையலறை வசதி மற்றும் LPG/PNG இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள், வானொலி டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி, இணையதள வசதி, மடிக்கணினி, கணினி, தொலைபேசி, கைபேசி, ஸ்மார்ட்போன்,

மிதிவண்டி ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் மொபெட், கார், ஜீப், வேன், குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம் என 33 கேள்விகள் கேட்கப்படும். இதில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *