பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை…
கோவை பாரதியார் பல்கலையின் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ள நிலையில், 17 நாடுகளை சேர்ந்த 65 வெளிநாட்டு மாணவர்கள் பல்கலையில் படித்து வருகின்றனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போது 38 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகளில் பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் பல்வேறு படிப்புகளில் மொத்தம் 2,434 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், 1,618 மாணவ, மாணவியர் பல்வேறு படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் 1,472 மாணவர்கள் சேர்ந்திருந்த…
