கோவையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கொள்ளை…

கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சேஷாத்ரி (73), ஆடிட்டர் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதன் கீழ் தளத்தில் யாரும் இல்லாத நிலையில், மூன்றாவது தளத்தில் சேஷாத்ரி மட்டும் குடியிருந்து வருகிறார். இவரது மகன் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சேஷாத்ரி மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க பெங்களூர் புறப்பட்டு சென்றனர். பின்னர், அவர்கள் நேற்று குடும்பத்துடன் கோவை திரும்பினர். அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள் உள்ளிட்ட சுமார் 50 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர், வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவுசெய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்கள் ஒரே நாள் இரவில் பொருட்களை கொள்ளை அடித்து செல்லவில்லை எனவும், பலமுறை வந்து பொருட்களை கொள்ள அடித்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

One thought on “கோவையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கொள்ளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *