கோவையில் பதுங்கி இருந்த தீவிரவாதி கைது…!

கோவையில் இளைஞர்களை தீவிரவாத செயலுக்கு மூளை சலவை செய்து இழுக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் மாத்வாபூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் குத்தூஸ் என்பவரின் மகன் மக்சூத் அலி (19), கோவை பீளமேடு ஹோப் கல்லூரி பகுதியில் பதுங்கி இருந்தார். இவரை உத்திரபிரதேச மாநில போலீசார் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி கைது செய்தனர்.பெங்களூரு செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் பிடிபட்டார்.

ஆசம்கர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபரான முகமது நபீல் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் மக்சூத் அலி கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது

முகமது நபீல் செப்டம்பர் 12ம் தேதி உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அல்-கொய்தா இந்திய துணைக்கண்டம் (AQIS) அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆன்லைன் செயல்பாட்டு குழுவில் மக்சூத் அலி இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.

தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த சபிகுல் என்பவர் நடத்தி வரும் மனிதவள நிறுவனத்தில் மக்சூத் அலி பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சபிகுல் மற்றும் சிலருடன் அவர் செப்டம்பர் 7-ம் தேதி கோவை வந்துள்ளார். பீளமேடு கொடிசியா  வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் பணிபுரிவதற்காக அவர்கள் வந்ததாகவும், ஹோப் கல்லூரி அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு  போலீசாரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழக போலீசார் மக்சூத் அலியின் இருப்பிடத்தை கண்காணித்தனர். ஒரு மணி நேரத்திற்குள் அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டு, அவர் பிடிபட்டார்.

இதையடுத்து, தமிழக  போலீசார் அவரை உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  பின்னர் அவர்  உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், மக்சூத் அலி முஸ்லிம் வாரியார் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை நடத்தி வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கேப்டன் எம் நெட்வொர்க்” என்ற செயலியை உருவாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். “ஒரே தளம், ஒரே நோக்கம் — ஒற்றுமை, திட்டம் மற்றும் செயல்பாடு என்பதே அதன் குறிக்கோளாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் செயலி இளைஞர்களை தீவிரவாத சிந்தனைக்கு தூண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்ற சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கூத் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஹேக்கிங் கருவிகளை உருவாக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இணையவழி ஆதாரங்கள் மூலம் பைதான் , ஜாவா, கோடிங் மற்றும் ஹேக்கிங் திறன்களை அவர் கற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

One thought on “கோவையில் பதுங்கி இருந்த தீவிரவாதி கைது…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *