கோவை இளம் பெண் கொலையின் பரபரப்பு பின்னணி…

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது.

சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண் பயன்படுத்திய ஒரு ஜோடி செருப்புகள் கண்டறியப்பட்டது.

இந்த செருப்பை வைத்து அந்தப் பெண் யார் என போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்கள் மற்றும் வெளியூரில் இருந்து கோவையில் தங்கி வேலை செய்யும் இளம்பெண்கள் குறித்து தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே மதுக்கரை கோவை புதூர் பைபாஸ் ரோடு பகுதியில் இரவு நேரத்தில் இளம் பெண்களுடன் சிலர் வலம் வருவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் பைபாஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி பெண்களுடன் அத்து மீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .இது தொடர்பாக போலீசுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இளம்பின் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் வலது கையில் ஜெகந்தி எனவும் ஜே எஸ் எனவும் எழுதப்பட்டிருந்தது. இறந்த பெண்ணின் கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பொருட்களால் தாக்கி கொலை செய்யப்பட்டாரா என உறுதி செய்ய முடியவில்லை.

சம்பவ இடத்தில் மோப்ப நாய் மூலமாக துப்பு துலக்கிய போது அது இறந்த பெண்ணின் செருப்பை மோப்பம் பிடித்து பைபாஸ் ரோடு வரை ஓடி சென்றது. அதற்குப் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை. கொலை செய்த நபர்கள் வாகனத்தில் வந்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவ இடத்தில் கொலை நடந்ததற்கான ஆதாரங்களோ வேறு பொருட்களோ கிடைக்கவில்லை. வேறு ஏதாவது இடத்தில் கொலை செய்து சடலத்தை இங்கே தூக்கி வந்து போட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. போலீசார் அறிவொளி நகர் , அண்ணாநகர், மதுக்கரை மற்றும் சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை செய்தனர்.

சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒரு நபர் அடிக்கடி சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று மது குடித்து வந்தது தெரிய வந்துள்ளது. அவரிடம் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இறந்த இளம் பெண் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. இளம் பெண்ணை காணவில்லை என அந்த வட்டாரத்தில் யாரும் போலீசில் புகார் தரவில்லை. இறந்த பெண் வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். தனிப்படை போலீ சார் கோவை, கேரளா, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது.

இன்னொரு பகுதியில் அதே ஒரே கிலோமீட்டர் தூரத்தில் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. அரை கிலோமீட்டர் தூரத்தில் சுகுணாபுரம் போலீஸ் செக் போஸ்ட் அமைந்துள்ளது.

மாநகர் மற்றும் மாவட்ட எல்லையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட மற்றும் மாநகர் போலீஸ் எல்லையில் வருவதால் இங்கே ரோந்து பணி சரியாக நடக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *