இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்ததால் கொன்றேன்…கோவையில் இளம்பெண் கொடூர கொலையில் கணவர் பகீர் வாக்குமூலம்…!
கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் கடந்த வாரம் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பெண் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண் பயன்படுத்திய ஒரு ஜோடி செருப்புகள் கண்டறியப்பட்டது.
இந்த செருப்பை வைத்து அந்தப் பெண் யார் என போலீசார் தேடினர். மேலும் கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்கள் மற்றும் வெளியூரில் இருந்து கோவையில் தங்கி வேலை செய்யும் இளம்பெண்கள் குறித்து தகவல்களை போலீசார் சேகரித்தனர்.
ஏற்கனவே மதுக்கரை கோவை புதூர் பைபாஸ் ரோடு பகுதியில் இரவு நேரத்தில் இளம் பெண்களுடன் சிலர் வலம் வருவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் பைபாஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி பெண்களுடன் அத்து மீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .இது தொடர்பாக போலீசுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணையில் இறந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பர்ஷா (21) என தெரியவந்தது. இவரது கணவர் பெயர் ஜெகன பிரதான்(23). இவர்கள் இருவரும் குனியமுத்தூர் பகுதியில் ரோட்டோரம் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். கட்டட கூலி வேலைக்கு இவர்கள் இருவரும் சென்று வந்துள்ளதாக தெரிகிறது. பர்ஷா கொலை செய்யப்பட்ட பின்னர் ஜெகன பிரதான் காணாமல் போய்விட்டார் இவரை போலீசார் தேடி வந்தனர் இன்று இரவு அவரை போலீசார் மடக்கி பிடித்து கோவை மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இவர் மனைவியை எப்படி கொலை செய்தார் எதற்காக கொலை செய்தார் என பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார் மேலும் சம்பவ இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று கொலை செய்த விவரங்களை நடித்து காட்டச் சொல்லி வீடியோ பதிவு செய்துள்ளனர். கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலையில் முக்கிய குற்றவாளி என கணவர் கைது செய்யப்பட்டார்.
மைதான ஜெகன பிரதான் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ” நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் பர்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இருவரும் கோவையில் பல்வேறு பகுதிகளில் கட்டட வேலை செய்யும் இடங்களில் தங்கி வாழ்க்கை நடத்தி வந்தோம். என் மனைவி இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக ஆண்களிடம் ஜாலியாக பேசி வந்தார். இதை நான் கண்டித்த போது எனக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது.
சில நாட்கள் அவர் என்னை விட்டு தனியாக வசித்து வந்தார். பின்னர் நான் அவரை சமாதானம் பேசி எனது அம்மா அப்பா தங்கி வேலை செய்யும் அறிவொளி நகர் கட்டடத்திற்கு அழைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தேன்.
அப்போது என் மனைவி சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறினார்.நான் நீரோடை பகுதிக்கு என் மனைவியுடன் சென்றேன். அப்போது எனது மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவரை கண்டித்தேன். மேலும் அவரை என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அதே இடத்தில் வற்புறுத்தினேன்.
நான் அதிகம் அது போதையில் இருந்த நிலையில் அவள் என்னை கேவலமாக பேசினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நீ எப்போதும் இன்ஸ்டாகிராமில் ரில்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்கும். இனி இப்படி செய்தால் நான் சும்மா விட மாட்டேன் என எச்சரித்தேன்.
அப்போது என் மனைவி என்னை எதிர்த்து பேசினாள். ஏற்கனவே பல மாதங்களாக அவரின் செயல்பாடுகளால் கடும் கோபத்தில் நான் இருந்தேன். என்னை எதிர்த்து பேசியதால் கோபத்தில் இருந்த நான் அவரை சரமாரியாக தாக்கினேன். கீழே விழுந்த அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் அவள் அணிந்திருந்த ஆடையை கழற்றி சிறிது தூரத்தில் யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி வீசி விட்டேன்.
வேறு யாரோ கள்ளத்தொடர்பு காரணமாக கொலை செய்து போட்டிருக்கலாம் என போலீசை திசை திருப்பும் நோக்கத்தில் அப்படி செய்தேன். பின்னர் கோவையில் இருந்து புறப்பட்டு ரயிலில் தெலுங்கானா மாநிலம் சென்று விட்டேன். அங்கே எனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் கட்டிட வேலை செய்து வந்தேன். போலீசார் என்னை பற்றி தகவல் அறிந்து என்னை தேடி வந்து பிடித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுக்கரை இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ‘ சம்பவம் நடந்த இடத்தில் இருந்த செல்போன் டவர் சிக்னல் மற்றும் கட்டுமான பணிகள் நடக்கும் பகுதிகளில் நாங்கள் நடத்திய விசாரணை அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல் கிடைத்தது. குற்றவாளி தப்பி சென்றதால் அவரை தேடி பிடிக்க காலதாமதம் ஏற்பட்டது. சவாலான இந்த கொலை வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளியை நாங்கள் கைது செய்து விட்டோம், ” என்றார்.
